ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தனது ராணுவப் படைகளைத் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து தாலிபான்கள் எளிதாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் ஆட்சி தாலிபான்களுக்குச் சென்றுள்ள நிலையில் அங்கு நிலையற்றத் தன்மை உருவாகியுள்ளது. பொதுமக்கள் பலரும் தாலிபான்களுக்கு அஞ்சி ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவருகின்றனர். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பிறநாட்டைச் சேர்ந்தவர்களையும் அந்தந்த நாட்டு அரசுகள் விரைவாக மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலும் உலக நாடுகள் பலவும் தங்களது காபூலிலுள்ள தங்களது தூதரகத்தை மூடியுள்ளனர். தற்போது, தங்கள் நாட்டு குடிமக்களை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் பல்வேறு நகரங்களில் சுமார் 1,000-த்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர்.
அவர்களுக்காக விமானங்கள் காபூலுக்கு அனுப்பப்பட்டன. அதன்படி கடந்த 16-ந்தேதி இந்திய தூதர், தூதரக அதிகாரிகள் உள்பட 40 பேர் மீட்கப்பட்டனர். மறுநாள் சி-17 ரக இந்திய விமானப்படை விமானம் மூலம் 150 பேர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். நேற்று 90 இந்தியர்கள் இந்திய விமானப்படை விமானம் மூலம் தஜிகிஸ்தான் நாடு வழியாக டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்தநிலையில் இன்று ஒரே நாளில் 329 இந்தியர்கள் மூன்று விமானங்களில் மீட்கப்பட்டுள்ளனர். ஏர் இந்தியா
விமானத்தில் 87 இந்தியர்கள், நேபாளத்தை சேர்ந்த 2 பேர் ஆக மொத்தம் 89 பேர் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர். அந்த விமானம் தஜிகிஸ்தான் வழியாக பயணித்து டெல்லிக்கு இன்று அதிகாலை வந்தடைந்தது. மற்றொரு விமானமான ‘இன்டிகோ’வில் 135 இந்தியர்கள் கத்தார் தலைநகர் தோகா வழியாக அழைத்து வரப்பட்டனர். இந்த விமானமும் இன்று அதிகாலை டெல்லியில் தரை இறங்கியது. ஆப்கானிஸ்தானில் இருந்து அழைத்து வரப்பட்ட பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டன. இதற்கிடையே ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 107 இந்தியர்கள் உள்பட 168 பேரை ஏற்றிக் கொண்டு இந்திய விமானப்படை விமானம் புறப்பட்டது. இதில் 24 ஆப்கன் சீக்கியர்கள், ஆப்கானிஸ்தானை சேர்ந்த இரண்டு செனட்டர்களும் அடங்குவர். அந்த விமானம் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரை இறங்கியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் வருகிற 24-ந் தேதிக்கு பிறகு காபூல் விமான நிலையமும் தலிபான்கள் வசம் சென்றுவிடும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் வருகிற 31-ந் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிவிடும். அதற்குள் எஞ்சியுள்ள இந்தியர்களை மீட்டுக் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்காக அமெரிக்காவின் உதவியை இந்தியா நாடி இருக்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.