உ.பி-யில் பெண் பாலியல் வன்கொடுமை! - 5 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது

கூட்டு பாலியல் வன்கொடுமை

காவல்துறை அதிகாரிகளிடம் அளித்த புகாரில், ஐந்து இளைஞர்கள் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் ஆறாவது நபர் அதனை வீடியோவாக பதிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  இந்தியாவின் பல மாநிலங்களிலும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அவ்வப்போது நடந்து இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்துவது உண்டு. அவ்வகையில் தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் 32 வயதான பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள படவுன் மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் அப்பகுதியில் இருக்கும் காட்டில் விறகு சேகரிக்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 6 பேர் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறை அதிகாரிகளிடம் கடந்த வியாழக்கிழமை பாதிப்படைந்த பெண் புகார் அளித்துள்ளார்.

  காவல்துறை அதிகாரிகளிடம் அளித்த புகாரில், ஐந்து இளைஞர்கள் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் ஆறாவது நபர் அதனை வீடியோவாக பதிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரில் ஐந்து பேர் சிறுவர்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டதை அடுத்தி அந்தப் பெண் புகார் அளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இந்த சம்பவத்தை வெளியில் யாரிடமாவது கூறினால் வீடியோவை வெளியிடுவதோடு அவரது கணவர் மற்றும் குழந்தைகளை கொன்றுவிடுவதாக அவரை மிரட்டியதாகவும் காவலர்களிடம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். புகாரைத் தொடர்ந்து 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
  Published by:Ram Sankar
  First published: