Home /News /national /

கால்வாயில் பேருந்து கவிழ்ந்து 32 பேர் உயிரிழப்பு

கால்வாயில் பேருந்து கவிழ்ந்து 32 பேர் உயிரிழப்பு

பேருந்து விபத்து

பேருந்து விபத்து

போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக மாற்றுப்பாதையில் ஓட்டிச் சென்றுள்ளார் ஓட்டுநர்.

    மத்திய பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற பஸ், கால்வாயில் விழுந்ததில் 32 பயணிகள் உயிரிழந்தனர்.

    விபத்துக்குள்ளான பேருந்து, சித்தி மாவட்டத்தில் இருந்து சத்னா நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, செவ்வாய்கிழமை காலை 7.30 மணியளவில் ராம்பூர் நாய்கின் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சுயா வேலி பகுதியில் செல்லவிருந்த பஸ்ஸை, போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக மாற்றுப்பாதையில் ஓட்டிச் சென்றுள்ளார் ஓட்டுநர்.

    எதிர்பாராத விதமாக பேருந்து கால்வாயில் மோதியதும், ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்திருக்கிறார். இதையடுத்து எஸ்.டி.ஆர்.எஃப் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து, கிரேன் உதவியுடன் பஸ்ஸை கால்வாயிலிருந்து மீட்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அருகிலுள்ள பன்சாகர் அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    32 இருக்கைகள் கொண்ட வாகனத்தில் 54 பயணிகள் இருந்ததால் பஸ் நெரிசலில் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர். மீட்கப்பட்டவர்களில் ஏழு பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். மீட்பு முடிந்தபின், இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சாலை விபத்து குறித்து விவாதிப்பதற்காக முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் போக்குவரத்து அமைச்சர் கோவிந்த் சிங் ராஜ்புத்தை வரவழைத்துள்ளார். இந்த சோகத்தையடுத்து முதல்வர் தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார்.

    சாலை விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ .5 லட்சம் நிவாரண தொகையாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

    மற்றொரு சம்பவத்தில், தூத்துக்குடியில் ஒரு மினி சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை மீறி செவ்வாய்க்கிழமை சாலையோர கால்வாயில் மோதியதில் ஐந்து பெண்கள் உயிரிழந்து, 30 பேர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial

    அடுத்த செய்தி