Oxygen : அமெரிக்காவில் இருந்து 318 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியா வந்தடைந்தன

ஆக்சிஜன் செறிவூட்டிகள்

கொரோனா நோயாளின் உயிரைக் காக்க முக்கிய பங்காற்றும் ஆக்சிஜன், தட்டுப்பாடு இன்றி கிடைப்பதற்கு ஏதுவாக அமெரிக்காவில் இருந்து 318 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தன.

  • Share this:
    கொரோனா நோயாளின் உயிரைக் காக்க முக்கிய பங்காற்றும் ஆக்சிஜன், தட்டுப்பாடு இன்றி கிடைப்பதற்கு ஏதுவாக அமெரிக்காவில் இருந்து 318 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தன.

    கொரோனா 2ஆவது அலையால் இந்தியாவில் மருத்துவ ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போதிய அளவு ஆக்சிஜன் இல்லாததால் டெல்லி மருத்துவமனையில் கடந்த 24-ஆம் தேதி 20 நோயாளிகள் மரணமடைந்தனர். இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தீர்க்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளே மேற்கொண்டு வருகின்றனது. அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்து வருகிறது. அத்துடன், ஆக்சிஜன் உற்பத்திக்கான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படுகின்றன.

    அந்தவகையில் அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று 318 ஆக்சிஜன் செறிவூட்டிகள் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டன. இது ஆக்சிஜன் உற்பத்திக்கு பெரும் உதவியாக இருக்கும் என கருதப்படுகின்றது.

    இந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை, பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்வதில் சிக்கல் நிலவி வருகிறது. வீரியம் மிகுந்த ஆக்சிஜனை பத்திரமாக எடுத்துச்செல்வதற்கு போதுமான தளவாடங்கள் இல்லாததால், இதற்கான தளவாடங்களையும் வெளிநாடுகளில் இருந்து பெற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

    அதன்படி, 4 கிரையோஜெனிக் டேங்கர்களை ஆக்சிஜன் போக்குவரத்திற்காக சிங்கப்பூரில் இருந்து கடந்த 24ஆம் தேதி இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டன. அதனைத் தொடர்ந்து துபாயில் இருந்து 2 காலி ஆக்சிஜன் டேங்கர்கள் விமானப்படை விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்படுகின்றன.

    இதனைத் தொடர்ந்து, இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ள டேங்குகள் மற்றும் கன்டெய்னர்களை மத்திய அரசு ஆக்சிஜன் நிரப்பும் நிலையங்களுக்கு அனுப்பி வருகிறது.

    கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.  இந்தியாவில் ஒரேநாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டுள்ளது. 3,52,991 பேருக்கு புதிதாகத் தொற்று பாதிப்பு கண்ணறியப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் மட்டும் 2,812 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், ஹரியாணா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் இல்லாமல் கொரோனா நோயாளிகள் 5 பேர் உயிரிழந்ததால், பொது மக்கள் போராட்டத்தல் ஈடுபட்டனர்.

    Must Read : மோடி, தேர்தல் ஆணையம் தப்பமுடியாது: சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மம்தா வரவேற்பு

     

    இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. இதற்கிடையில், ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: