குஜராத்தில் 2 ஆண்டுகளில் 313 சிங்கங்கள் உயிரிழப்பு

கோபுப் படம்

குஜராத்தில் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் 152 குட்டிகள் உட்பட மொத்தம் 313 சிங்கங்கள் இறந்துவிட்டன.

 • Share this:
  குஜராத் மாநிலம் கிர் வனப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் 313 சிங்கங்கள் உயிரிழந்திருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. குஜராத் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ விர்ஜி தும்மரின் கேள்விக்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் கன்பத் வசாவா, கிர் சரணாலயத்தில் 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் மட்டும் 313 சிங்கங்கள் உயிரிழந்திருப்பதாக கூறி உள்ளார். அதில் 23 சிங்கங்கள் இயற்கைக்கு மாறாக உயிரிழந்திருப்பதாக அவர் கூறி உள்ளார்.

  மேலும் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சிங்கங்களின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அதன்படி தற்போது 674 சிங்கங்கள் உள்ளதாகவும் வனத்துறை அமைச்சர் கன்பத் வசாவா தெரிவித்துள்ளார். மேலும் வனத்துறையால் வழங்கப்பட்ட இறைச்சியிலிருந்து சில சிங்கங்கள் வைரஸால் பாதிக்கப்படுவதாக திரு தும்மர் கூறியதை அடுத்து அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

  மேலும் படிக்க... 30 ஆண்டுகால சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸின் செயல்பாடு எப்படி?  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: