• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 2020ல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு குழந்தை தற்கொலை - தேசிய குற்ற ஆவண பாதுகாப்பகம் அதிர்ச்சித் தகவல்

2020ல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு குழந்தை தற்கொலை - தேசிய குற்ற ஆவண பாதுகாப்பகம் அதிர்ச்சித் தகவல்

Child Suicide

Child Suicide

2020ல் தற்கொலை செய்த குழந்தைகளில் குடும்ப பிரச்னைகள் காரணமாக 4006 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. காதல் பிரச்னை காரணமாக 1,337 பேர் இறந்துள்ளனர்.

  • Share this:
கடந்த 2020ம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் 31 குழந்தைகள் தற்கொலை செய்து உயிரிழந்திருப்பதாக தேசிய குற்ற ஆவண பாதுகாப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்.சி.ஆர்.பி எனப்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம், ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் நடக்கும் குற்றங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2020ம் ஆண்டு குறித்து என்.சி.ஆர்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டில் நடைபெற்ற குழந்தை தற்கொலைகள் குறித்து பதறவைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி கொரோனா காலத்தில் குழந்தை தற்கொலைகள் கணிசமாக அதிகரித்திருப்பது தெரியவந்திருக்கிறது.

2020ம் ஆண்டு 18 வயதிற்கு உட்பட்ட 11,396 குழந்தைகள் தற்கொலை செய்து உயிரிழந்திருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை தெரிவிக்கிறது. இதுவே 2019ம் ஆண்டு 9,613 குழந்தைகள்ள் தற்கொலை செய்திருந்தனர் எனவும் 2019ம் ஆண்டைக் காட்டிலும் 2020ல் 18 சதவிகிதம் தற்கொலைகள் அதிகரித்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் 2018ல் 9413 குழந்தைகள் தற்கொலை செய்திருந்ததாகவும், 2018ம் ஆண்டைக் காட்டிலும் 2020ல் 21 சதவிகிதம் தற்கொலைகள் அதிகரித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Also read:  பாஜகவுக்கு சிக்னல் கொடுத்த திரிணாமுல் காங்கிரஸ்.. ரஜீப் பானர்ஜி அகர்தலாவில் இணைந்த ரகசியம்..

2020ல் தற்கொலை செய்து கொண்ட 11,396 0குழந்தைகளில் 5,392 பேர் ஆண்கள், 6,004 பேர் பெண்கள். தினசரி அடிப்படையில் கணக்கிட்டால் ஒரு நாளுக்கு 31 தற்கொலைகள் அரங்கேறியிருக்கின்றன. ஒரு மணிநேரத்திற்கு சுமார் ஒருவர் எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

தற்கொலைகளுக்கு முக்கிய காரணம்:

2020ல் தற்கொலை செய்த குழந்தைகளில் குடும்ப பிரச்னைகள் காரணமாக 4006 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. காதல் பிரச்னை காரணமாக 1,337 பேரும், உடல்நிலை பிரச்னைகளால் 1,327 பேரும் தற்கொலை செய்துள்ளனர். திரை நட்சத்திரங்கள், வேலையின்மை, கடன், போதைப் பொருள் பழக்கம், இயலாமை அல்லது கருவுறாமை போன்ற பிரச்னைகள் காரணங்களாலும் குழந்தை தற்கொலைகள் நடைபெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Also read:  எங்களை அங்கீகரிக்காவிட்டால்… உலக நாடுகளுக்கு தாலிபான்கள் விடுத்த எச்சரிக்கை!

கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் பிள்ளைகள் தங்களின் பெற்றோர் மொபைல் வாங்கித் தரவில்லை என்றும் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். மேலும் ஆன்லைன் வகுப்புகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாலும், அதீத மொபைல் பயன்பாட்டினால் ஏற்பட்ட மன உளைச்சலினாலும், ஆன்லைனில் துன்புறுத்தலை அனுபவதித்தன் வாயிலாகவும் குழந்தை தற்கொலைகள் நடைபெற்றிருப்பது என்.சி.ஆர்.பி அறிக்கையின் மூலம் தெரியவந்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: