Home /News /national /

திருப்பதியில் 72 மணிநேரத்தில் விற்றுத் தீர்ந்த 6 லட்சம் தரிசன டிக்கெட்டுகள்

திருப்பதியில் 72 மணிநேரத்தில் விற்றுத் தீர்ந்த 6 லட்சம் தரிசன டிக்கெட்டுகள்

திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட் விற்று தீர்ந்தது

திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட் விற்று தீர்ந்தது

Tirupathi Dharsan Tickets Sales : பிரம்மோத்சவ நாட்களில் அங்க பிரதக்ஷன டோக்கன்கள் வழங்கப்பட மாட்டாது என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirumala | Tamil Nadu
    திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கான ஆறு லட்சம் டிக்கெட்டுகள் 72 மணி நேரத்தில் விற்று தீர்ந்தன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதம் சாமி  தரிசனத்திற்காக ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் கடந்த 18ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

    நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் டிக்கெட் வீதம் 24 நாட்களுக்கு ஆறு லட்சம் டிக்கெட்டுகள் அன்று வெளியிடப்பட்டன. அவ்வாறு ஆன்லைனில் வெளியிடப்பட்ட 6 லட்சம் டிக்கெட்டுகளும் அடுத்த 72 மணி நேரத்திற்குள்ளாக விற்று தீர்ந்தன.

    இதன் மூலம் தேவஸ்தானத்திற்கு 18 கோடி ரூபாய் வருமானம் கிடைக்க பெற்றுள்ளது. இம்மாதம் 22 ஆம் தேதி அடுத்த மாதத்திற்கான அங்க பிரதக்ஷன டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 750 டிக்கெட்டுகள் வழங்கப்படவுள்ளது.

    இதையும் படிங்க: கடந்த 3 ஆண்டுகளில் 7 கோடி கிராமப்புற வீடுகளில் குடிநீர் இணைப்பு - பிரதமர் மோடி பெருமிதம்

    மேலும், செப்டம்பர் 27ஆம் தேதி முதல் தொடங்கி 9 நாள்களுக்கு பிரம்மோற்சவம் நடைபெறவுள்ளது. இந்த நாட்களில் அங்க பிரதக்ஷன டோக்கன்கள் வழங்கப்பட மாட்டாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    ஏழுமலையானை வழிபட விரும்பும் பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகளை www.tirupatibalaji.gov.in தேவஸ்தான வெப்சைட் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Ticket booking, Tirumala, Tirumala Tirupati

    அடுத்த செய்தி