Home /News /national /

பிறந்தநாள் கொண்டாடத்திற்காக ரொட்டி வாங்கியதில் தகராறு - 30 வயது நபர் அடித்துக் கொலை

பிறந்தநாள் கொண்டாடத்திற்காக ரொட்டி வாங்கியதில் தகராறு - 30 வயது நபர் அடித்துக் கொலை

ரொட்டிக்காக விழுந்த கொலை

ரொட்டிக்காக விழுந்த கொலை

சன்னி என்பவர் தனது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்திற்காக 150 ரொட்டிகளை அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் ஆடர் செய்துள்ளார்.

    ரொட்டி வாங்குவது தொடர்பாக எழுந்த சர்ச்சையில் 30 வயது நபர் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிக்குரிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரேதச மாநிலம் பரேலியில் உள்ள காவல் நிலையத்தில் இது தொடர்பான வழக்கு பதிவாகியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பு கூறியதாவது, உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள சென்னேத்தா என்ற பகுதியில் சன்னி என்பவர் தனது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்திற்காக 150 ரொட்டிகளை அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் ஆடர் செய்துள்ளார். இதற்கான தொகையையும் இவர் செலுத்தியுள்ளார்.

    இந்நிலையில் பிறந்த நாள் அன்று ரொட்டிகளை வாங்கிக் கொள்வதற்காக சன்னி தனது உறவினருடன் கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடை உரிமையாளர் 40 ரொட்டிகளை மட்டுமே தந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சன்னி இது தொடர்பாக கடை உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இவருக்கும் இடையேயான வாக்குவாதம் சண்டையாக மாறியது. இதில் சன்னியை ஹோட்டல் உரிமையாளர் சீஷான், கடையில் வேலை செய்யும் உரிமையாளர்களுடன் சேர்த்து பலமாகத் தாக்கியுள்ளனர்.

    இதையும் படிங்க: குடிக்க பணம் தராததால் தாத்தா, பாட்டியை அடித்துக் கொன்ற 20 வயது பேரன்

    இதில் இருவருக்கும் பலத்த காயம் அடைந்த நிலையில், சன்னி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உறவினர் படுகாயங்களோடு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக சன்னியின் தந்தை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடையில் வேலை செய்ய நபர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய உரிமையாளர் சீஷனை காவல்துறை தேடி வருகிறது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Muder, Uttar pradesh

    அடுத்த செய்தி