Home /News /national /

ஆண் குழந்தை இல்லாததால் அடித்து துன்புறுத்திய கணவர்.. அமெரிக்காவில் சீக்கிய பெண் தற்கொலை

ஆண் குழந்தை இல்லாததால் அடித்து துன்புறுத்திய கணவர்.. அமெரிக்காவில் சீக்கிய பெண் தற்கொலை

குடும்ப வன்முறை காரணமாக அமெரிக்காவில் இந்திய பெண்கள் தற்கொலை

குடும்ப வன்முறை காரணமாக அமெரிக்காவில் இந்திய பெண்கள் தற்கொலை

மன்தீப் கவுருக்கு 6 வயது, 4 வயதில் இரு மகள்கள் உள்ள நிலையில் ஆண் குழந்தை இல்லாததை காரணம் காட்டி கணவர் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India
    ஆண் குழந்தை இல்லை என்பதால், கணவரால் குடும்ப வன்முறைக்கு ஆளாகிய சீக்கிய பெண் அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்டார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜஸ்பால் சிங். இவர் தனது மகள் மன்தீப் கவுருக்கு 2015ஆம் ஆண்டில் ரஜோத்பீர் சிங் என்பவருடன் திருமணம் முடித்து வைத்தார். கணவர் ரஜோத்பீர் அமெரிக்காவில் ட்ரக் ஓட்டுனராக உள்ளார். திருமணமான மூன்று ஆண்டுகளில் மனைவி மன்தீப்பும் தனது கணவருடன் அமெரிக்காவில் குடியேறியுள்ளார்.

    இந்த தம்பதிக்கூ 6 வயது, 4 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஆண் குழந்தை இல்லாததை காரணம் காட்டி அவரது கணவர் மன்தீப் கவுரை தினம் தோறும் அடித்து துன்புறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தனது தந்தைக்கு வீடியோ ஒன்றை பதிவு செய்து அனுப்பிய மன்தீப்,  ‘நான் எட்டு ஆண்டுகளாக துன்பத்தை சந்தித்து வருகிறேன். என்னால், தினமும் அடி வாங்க முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள், நான் சாகப்போகிறேன்’ என கூறி தற்கொலை செய்துள்ளார்.

    இந்த வீடியோவை உத்தரப் பிரதேசத்தில் உள்ள குடும்பத்தார் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொண்டு அவர்கள் விவரத்தை தெரிவித்துள்ளனர். இவர்களது புகாரை ஏற்று உடனடியாக உதவுவதாக அமெரிக்க தூதரகமும் தெரிவித்துள்ளது. தனது மகளுக்கு நேர்ந்த அவலம் தொடர்பாக அவரது தந்தை ஜஸ்பால் கூறுகையில், திருமணம் ஆன சில நாள்களில் இருந்தே இந்த கொடுமையை எனது மகள் அனுபவித்து வருகிறார். அவளுக்கு பெண் குழந்தை பிறந்ததில் இருந்து நிலைமை மோசமானது.

    இதையும் படிங்க: வேலை செய்யுங்கள் அல்லது விருப்ப ஓய்வு பெற்று வெளியேறுங்கள்..பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

    எனது பேத்திகளை பத்திரமாக இந்தியா கொண்டு வந்து வளர்க்க அமெரிக்க தூதரகம் உதவ வேண்டும் எனக் கோரியுள்ளார். அதேபோல், குற்றம் செய்த அவரது கணவருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கப்பட்டு, உயிரிழந்த மன்தீப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என மன்தீப்பின் தங்கை வலியுறுத்தியுள்ளார்.

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Kannan V
    First published:

    Tags: Domestic Violence, Husband Wife, Suicide

    அடுத்த செய்தி