Home /News /national /

சினிமாவை மிஞ்சும் சம்பவம்: திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை கொலை செய்து வீட்டின் சுவற்றிற்குள் சடலத்தை மறைத்த காதலன்!

சினிமாவை மிஞ்சும் சம்பவம்: திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை கொலை செய்து வீட்டின் சுவற்றிற்குள் சடலத்தை மறைத்த காதலன்!

திருமணம் செய்ய காதலி வற்புறுத்தியதால் அவரை கொலை செய்து வீட்டின் சுவற்றிற்குள் காதலன் மறைத்து வைத்திருந்த  சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
இது போன்ற சம்பவங்களை எல்லாம் சினிமாவில் தான் பார்த்திருப்போம், ஆனால் நிஜமும், சினிமாவும் வேறு வேறு இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கத்தான் செய்கின்றன. அது போன்றதொரு சம்பவமும் இதுவும்.

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த வாங்கோன் எனும் கிராமத்தைச் சேர்ந்த 30 வயது ஆசாமி ஒருவரின் வீட்டின் சுவற்றில் இருந்து கொலை செய்யப்பட்ட அவரின் காதலியின் எலும்புக்கூட்டை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

32 வயதான பெண்னை 5 வருடங்களாக காதலித்து வந்த அந்த 30 வயது ஆசாமி, அவருடன் லிவ்விங் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த ஆசாமியுடன் ஒன்றாக வாழ்ந்த அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முடியாததால் அவர் எங்கிருக்கிறார் என அப்பெண்ணின் பெற்றோர் விசாரித்திருக்கின்றனர். அதற்கு குஜராத்தில் உள்ள வபி எனும் பகுதிக்கு அப்பெண் சென்றிருப்பதாக அவளின் பெற்றோரிடம் சொல்லி சமாளித்திருக்கிறார்.

இருப்பினும் தங்களின் மகளை வெகுநாட்களாக காணாததால் இது தொடர்பாக காவல்நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர். கடைசியாக தங்களின் மகளை கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி தான் பார்த்ததாகவும் காவல்துறையினரிடம் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் அந்த நபரிடம் தகுந்த முறையில் விசாரித்த போது தான் அவரை கொலை செய்து சுவற்றில் வைத்து பூசிவிட்டதாக அவர் தெரிவித்தார். இதனால் காவல்துறையினரும், பெண்ணின் பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர். வாங்கோன் கிராமத்தில் அந்த நபர் வசித்து வந்த வீட்டின் சுவற்றில் இருந்து அவனின் காதலியின் எலும்புக்கூட்டினை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் அவரை கொலை செய்ததாக அந்த நபர் தெரிவித்திருக்கிறார். அந்த நபர் மீது கொலை, கொலையை மறைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Published by:Arun
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Girl Murder

அடுத்த செய்தி