திருப்பதியில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இன்றி 30 பேர் உயிரிழப்பு?

மாதிரிப்படம்.

ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்றப்பட்ட லாரி தாமதமாக மருத்துவமனை வந்து சேர்ந்தது. அதற்குள் 11 நோயாளிகள் ஆக்சிஜன் இன்றி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

 • Share this:
  ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 30-க்கும் மேற்பட்டோர் கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

  திருப்பதியில் உள்ள ரூயா அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சிகிச்சைக்காக வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் குறைந்துள்ளது. இதனால், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதை அறிந்த  கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் உள்ளே சென்று கைகளில் கிடைத்த காகித அட்டை போன்றவற்றை பயன்படுத்தி விசிறி விட்டனர்.

  இதற்கிடையில், ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்றப்பட்ட லாரி தாமதமாக மருத்துவமனை வந்து சேர்ந்தது. அதற்குள் 11 நோயாளிகள் ஆக்சிஜன் இன்றி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆக்சிஜன் இன்றி அவதிப்பட்ட 15-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர்.

  ஆனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 30-ஐ தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்துவதற்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் உத்தரவிட்டுள்ளார்.
  Published by:Vijay R
  First published: