தெலங்கானா: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சடலமாக மீட்பு

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் 3 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது புதிதாக தோண்டப்பட்ட ஆள்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

தெலங்கானா: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சடலமாக மீட்பு
தெலங்கானா சிறுவன் சாய்வர்தன்
  • Share this:
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் 3 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது புதிதாக தோண்டப்பட்ட ஆள்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

தெலங்கானா மாவட்டத்தில் உள்ள பொடிச்சன் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிக்‌ஷபதி. அவருடைய மைத்துனர் கோவர்தன்.
கோவர்தனின் 3 வயது மகன் சாய்வர்தன் தன்னுடைய மாமா பிக்‌ஷபதி வீட்டிற்கு வந்திருந்த நிலையில், நேற்று மாலை வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த வேளையில் அருகில் இருக்கும் பிக்‌ஷபதியின் விவசாயத்தில் போடப்பட்டிருந்த ஆழ்துளை கிணறு சமீபத்தில் சென்று கால் தவறி அதற்குள் விழுந்து விட்டான்.


போர்வெல் மரணம்


கோடை காலம் ஆகையால் விவசாயம் செய்ய நீர் இல்லாத நிலையில் பிக்‌ஷபதி நேற்று முன் தினம் இரவு தன்னுடைய வயலில் ஆள்துளை கிணறு தோண்டினார். இரண்டு இடங்களில் ஆழ்துளை கிணறு தோண்டியும் தண்ணீர் வராத காரணத்தால் மூன்றாவதாக தோண்டப்பட்ட ஆள்துளை கிணற்றில் தண்ணீர் வந்தது.
தண்ணீர் வராத 2 ஆள்துளை கிணறுகளையும் பிக்சபதி அப்படியே விட்டுவிட்டார்.
சிறுவன் சாய்வர்தன்


இந்த நிலையில் தன்னுடைய வீட்டுக்கு வந்திருந்த உறவினரின் 3 வயது மகன் சாய்வர்தன் வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த நிலையில் அருகிலிருக்கும் விவசாயிகளுக்கு சென்று நேற்று மாலை கால் தவறி 120 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டான். சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததை பார்த்த சிலர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவனுடைய உறவினர்கள் ஆழ்துளை கிணற்றின் அருகில் பள்ளம் தோண்டி சிறுவனை வெளியில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்த போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள், தீயணைப்புத்துறையினர் ஆகியோர் விரைந்து சென்று மீட்புப் பணியை முடுக்கி விட்டனர்.
இந்த நிலையில் எந்த நிலையில் 17 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கி கொண்டிருப்பதை கண்டுபிடித்த மீட்புக்குழுவினர் இரவு முழுவதும் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இன்று அதிகாலை 17 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் பள்ளத்திலிருந்து ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சிக்கிக்கொண்டு இருந்த பகுதிக்கு பக்கவாட்டிலிருந்து தோண்டிக் கொண்டு சென்ற மீட்புக்குழுவினர் சிறுவனை மீட்டனர்.
ஆனால் சிறுவன் சாய் வர்தன் அச்சம், கோடை காலம் ஆகையால் நிலத்தில் ஏற்பட்டிருக்கும் வெப்பம் ஆகியவற்றின் காரணமாக ஆள்துளை கிணற்றில் மரணமடைந்துவிட்டான்.
First published: May 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading