சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை காட்டி 3 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 60 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அசோக் நகர் பகுதியில் ஏ.டி.எம். ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 3 வயது குழந்தையை 60 வயது முதியவர் கையில் வைத்திருந்தபோது, அந்த குழந்தை கதறி அழத் தொடங்கியுள்ளது.
இதை காயத்ரி பாஸ்கர் என்ற பெண் பார்த்துள்ளார். தொடர்ந்து அவர் கவனித்ததில், அந்த முதியவர் 3 வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தலை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, தனது தோழி விஜயா பாட்டீலுடன் சேர்ந்து, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க -
இந்து நண்பர்கள் ஆதரவாக உள்ளனர், கல்வி தான் முக்கியம்.. கர்நாடக மாணவி
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், முதியவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், முதியவர் குழந்தையின் வீட்டுக்காரர் என்பதும், மிட்டாய் வாங்கி தருவதாக கூறி, குழந்தையை எடுத்து வந்ததும் தெரியவந்தது.
விசாரணையின்போது, குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததை முதியவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதேபோன்ற குற்றங்களை இதற்கு முன்பாக முதியவர் அளித்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க -
ஹிஜாப் விவகாரத்தில் இந்திய தலைவர்களுக்கு மலாலா கண்டனம்
இதற்காக இவர் மீது 2 முறை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில் தற்போது, போக்சோ சட்டத்தின் கீழ் முதியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
3 வயது குழந்தைக்கு முதியவர் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.