ராஜஸ்தான் மாநிலம் சித்தர்கர் மாவட்டத்தில் உள்ள பாசி என்ற பகுதியில் மூன்று வயது சிறுமி மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக அப்பகுதி காவல்துறை தெரிவித்துள்ள தகவலில், அந்த கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்க சிறுமியின் குடும்பத்தினர் அனைவரும் சென்றுள்ளனர்.
இந்த திருமண விழா, அதன் சடங்குகளில் அனைவரும் பிசியாக இருந்த வேலையில்,குற்றச்சாட்டப்பட்ட நபர் நான்கு வயது சிறுவனை அருகே உள்ள கிணற்று பகுதிக்கு தனியாக அழைத்துச் சென்று பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கியுள்ளார். அந்த சிறுவன் பயத்தில் கூச்சலிடவே அந்நபர் சிறுவனை திருமணம் நடைபெறும் இடத்திற்கே மீண்டும் கொண்டுவந்து விட்டுள்ளார்.
இதையும் படிங்க:
பரபரப்புக்காக தவறான செய்திகளை வெளியிடாதீர்கள் - டிவி சேனல்களுக்கு அரசு அறிவுறுத்தல்
அதைத் தொடர்ந்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமியை அதே பகுதிக்கு தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து கிணற்றில் வீசியுள்ளார். பின்னர், யாருக்கும் சந்தேகம் வராத வகையில் அந்நபர் திருமண விழாவில் இயல்பாக திரிந்துள்ளார். சிறுமியை காணவில்லை என்றதும் அச்சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில், அச்சிறுமி குற்றம் சாட்டப்பட்ட அந்த நபருடன் தான் கடைசியாக தென்பட்டார் எனத் தெரியவந்தது.
இதையடுத்து அந்நபரிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டது. முதலில் அந்நபர் போக்கு காட்டியதாகவும், தொடர் விசாரணையில் இறுதியாக குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்காக உள்ளூர் பாஜக எம்எல்ஏ சந்திரபஹன் சிங் மற்றும் கிராமத்தினர் தொடர் அழுத்தம் தந்துவருகின்றனர். வழக்கை காவல்துறை விரைந்து நடத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை பெற்றுத் தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது போக்சோ, எஸ்டி எஸ்டி வன்கொடுமை சட்டம், சிறார் நீதி சட்டம் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.