முகப்பு /செய்தி /இந்தியா / காதலியின் 3 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வாலிபர் கைது.. கஞ்சா போதையில் கொடூரம்

காதலியின் 3 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வாலிபர் கைது.. கஞ்சா போதையில் கொடூரம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த வாலிபரை பெங்களூரு காவல்துறை கைது செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் கமாக்ஷிபாலயா பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் ஜவுளி தொழில்சாலையில் வேலை பார்த்து வருகிறது. திருமணமான இவரை கணவர் விட்டுச் சென்ற நிலையில் மூன்றரை வயது பெண் குழந்தையை இவர் தனியாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், இந்த பெண்ணுக்கு 26 வயது வாலிபருடன் ஓராண்டுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் உறவாக மாறவே பெண்ணும் வாலிபரும் ஒன்றாக வாழத் தொடங்கியுள்ளனர்.

கடந்த திங்கள் கிழமை இரவு இந்த பெண் வழக்கமாக பணிக்கு சென்ற நிலையில் வீட்டில் அந்த வாலிபர் 3 வயது பெண் குழந்தையுடன் இருந்துள்ளார். வாலிபர் கஞ்சா போதையில் இருந்த நிலையில், குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கி ஆளாக்கி கொலை செய்துள்ளார். பெண் வழக்கம் போல வேலை முடிந்து திரும்பிய போது குழந்தை மூச்சு பேச்சின்றி இருந்துள்ளது. குழந்தையை மருத்துமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குழந்தையின் உடலில் காயத்திற்கான தடயங்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து பெண் அந்த வாலிபரிடம் விசாரித்த போது அவரை வாலிபர் தாக்கத்தொடங்கியுள்ளார். உடனே மருத்துவமனையில் இருந்த நபர்கள் வாலிபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் நடத்திய விசாரணையில் வாலிபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த காவல்துறை போக்சோ, கொலை குற்றம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தது.

First published:

Tags: Bengaluru, Crime News, Murder, Pocso, Rape