முகப்பு /செய்தி /இந்தியா / மது போதையில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. வெறிச்செயலில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது..!

மது போதையில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. வெறிச்செயலில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது..!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

டெல்லியில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய இரு வாலிபர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

தெற்கு டெல்லியில் உள்ள பத்தேபூர் பேரி என்ற பகுதியில் வசிக்கும் ராணி என்பவருக்கு மூன்று வயது பெண் குழந்தை உள்ளது. ராணியின் வீட்டருகே ராம்நிவாஸ் பனிகா(27), சக்திமான் சிங் (22) என்ற இருவர் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் மத்திய பிரதேச மாநிலத்தின் சித்தி பகுதியை சேர்ந்தவர்கள். வேலைக்காக டெல்லியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராணியின் மூன்று வயது பெண் குழந்தை வீட்டில் நெடுநேரமாக காணவில்லை. எனவே, பதறிப்போய் ராணி தனது குழந்தையை அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். அங்கிருந்தவர்கள் குழந்தையை இரு வாலிபர்கள் காட்டுப் பகுதி அருகே அழைத்து சென்றதை பார்த்ததாக கூறியுள்ளனர். இதைகேட்ட தாயார் ராணி சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த நிலையில், அங்கே குழந்தை அழுது கொண்டிருந்தது. மேலும், குழந்தையின் உறுப்பில் ரத்த காயம் இருந்துள்ளது.

இதை பார்த்து பதறிப்போன தாயார் ராணி குழந்தையை வீட்டு தூக்கிச் சென்று சம்பவத்தை கணவரிடம் கூறியுள்ளார். உடனடியாக பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அத்துடன் இருவர் மீது காவல்துறையில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், வாலிபர்கள் ராம்நிவாஸ் மற்றும் சக்திமான் சிங் ஆகிய இருவரையும் டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இருவரும் மதுபோதையில் இந்த குற்றச் செயலை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

First published:

Tags: Crime News, Delhi, Gang rape