கேரளா மாநிலம் சபரிமலையில் 3 வயது குழந்தை ஐயப்பனை தரிசனம் செய்ய சரண கோஷம் பாடிய படி முதியவருடன் நடந்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் சபரிமலையில் கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்வதில் சிரமங்கள் ஏற்பட்ட நிலையில் ஈரான்டு இடைவெளிக்கு பின்பு இந்த ஆண்டு பல லட்சம் பக்தர்கள் உற்சாகத்தோடு ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.
சிறு வயது குழந்தை முதல் தள்ளாடும் முதியவர்கள் வரை சரண கோஷம் எழுப்பி சபரிமலை சன்னிதானத்திற்கு சென்று திரும்புவதை காண்பவர்களுக்கே பக்தி பரவசம் ஏற்படுகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலை சேர்ந்த மூன்று வயது குழந்தையான கிருஸ்விக் கார்த்தி, முதியவர் ஒருவருடன் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க மிகுந்த ஆர்வத்துடன் சரண கோஷம் எழுப்பியபடி சபரிமலையில் நடந்து செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Baby, Kanniyakumari, Sabarimalai, Sabarimalai Ayyappan temple, Viral Video