முகப்பு /செய்தி /இந்தியா / காஷ்மீரில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

கோப்பு படம்

கோப்பு படம்

3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பிணையக்கைதியாக சிறைப்பிடிக்கப்பட்டிருந்த நபர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

  • Last Updated :

காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர்மரணமடைந்தார்.

காஷ்மீர் மாநிலத்தின் ரம்பான் மாவட்டத்தில் உள்ள படோட் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, காவல்துறை, ராணுவம் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

பெரும்படை நெருங்கி வருவதை அறிந்த பயங்கரவாதிகள், அப்பகுதியில் இருந்த வீடு ஒன்றுக்குள் புகுந்தனர். மேலும் பொதுமக்களில் ஒருவரையும் பணையக்கைதியாக அவர்கள் பிடித்து வைத்துக் கொண்டனர்.

இதை அறிந்த பாதுகாப்புப்படையினர் பயங்கரவாதிகள் பதுங்கிய வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பிணையக்கைதியாக சிறைப்பிடிக்கப்பட்டிருந்த நபர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் மரணம் அடைந்தார். 2 காவலர்கள் படுகாயமடைந்தனர். பயங்கரவாதிகளை வீழ்த்தும் நடவடிக்கை வெற்றி அடைந்ததை, ராணுவ வீரர்கள் வெற்றி முழக்கமிட்டு கொண்டாடினர்.

Also Watch 

top videos

    First published:

    Tags: Indian army, Jammu and Kashmir