Home /News /national /

சபரிமலையில் 3 தமிழக பக்தர்கள் மரணம்

சபரிமலையில் 3 தமிழக பக்தர்கள் மரணம்

ஐயப்ப பக்தர்கள்

ஐயப்ப பக்தர்கள்

கேரளா மாநிலம் சபரிமலை செல்லும் போது மாரடைப்பு ஏற்பட்டு 3 தமிழக பக்தர்கள் மரணமடைந்துள்ளனர்.

    கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் யாத்திரை கடந்த நவம்பர் 16ம் தேதி தொடங்கியது. இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் இந்த யாத்திரை ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் முடிவடையும். கொரோனா தொற்று காரமணாாக சபரிமலை வரும் பக்தர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

    பக்தர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும் அல்லது தரிசனத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன் கொரோனா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சபரிமலையின் புனித நதியான பம்பையில் நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இதனிடையே சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கு வரும் பக்கதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியதால் கூடுதல் தளர்வுகளை தேவஸ்தானம் போர்டு அறிவித்தது. அதன்படி பம்பையில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி அளித்து கேரள அரசு அறிவித்தது.  மேலும், சபரிமலை செல்லும் பக்தர்கள் சன்னிதானத்திற்கு பாரம்பரிய பாதையான நீலிமலை, அப்பாச்சி மேடு வழியாக செல்லலாம் என்றும் தேவசம்போர்டு அறிவித்தது.

    இதையடுத்து நீலிமலை, அப்பாச்சிமேடு வழியாக பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்த இளங்கோபன் (45), மதுரையை சேர்ந்த முருகேசன் போஸ் (41), குமார பாளையம் பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் நாச்சி முத்து (58), ஆகிய மூன்று ஐயப்ப பக்தர்கள் நேற்று நீலிமலை ஏறும் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளனர்.

    Also Read : ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று… மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பாடு...

    நீலிமலை பகுதியில் வைத்து மாரடைப்பு ஏற்பட்ட இவர்களை பம்பை மருத்துவமனையில் கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்துள்ளனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Sabarimala

    அடுத்த செய்தி