3 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வாங்கிக்கொண்டு முதியவரைத் துரத்திய மகன்கள்.. காவல்துறை வழக்குப் பதிவு..

தனித்து விடப்பட்ட அவருக்கு கிராம மக்கள் உணவளிப்பதையும் தடுத்து அவர்களையும் அச்சுறுத்தி இருக்கிறார்கள்.

3 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வாங்கிக்கொண்டு முதியவரைத் துரத்திய மகன்கள்.. காவல்துறை வழக்குப் பதிவு..
மாதிரிப் படம்
  • Share this:
தெலங்கானாவின் சித்திப்பேட் மாவட்டத்தில், 3 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வலுக்கட்டாயமாக பிடுங்கிக்கொண்டு 79 வயதான தந்தையை வீட்டிலிருந்து துரத்திய 3 மகன்கள் மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.

பொத்து சுதாகர், பொத்து ஜனார்த்தன் மற்றும் பொத்து ரவீந்தர் ஆகிய மூன்று மகன்களும், 79 வயதானவரான பொத்து மல்லையாவின் 3 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தங்கள் வசமாக்கிக்கொண்டு அவரை  வீட்டைவிட்டு துரத்தியிருக்கிறார்கள். அது மட்டுமின்று தனித்து விடப்பட்ட அவருக்கு கிராம மக்கள் உணவளிப்பதையும் தடுத்து அவர்களையும் அச்சுறுத்தி இருக்கிறார்கள்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, காவல்துறை அதிகாரிகளால் முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட மல்லையா உடல்நலமின்றி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சித்திப்பேட் மாவட்டம், மாதிரா கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், ஏமாற்றுதல், மூத்த குடிமக்கள் நலச்சட்டப் பிரிவுகளின் கீழ் மூன்று மகன்களின் மீதும் வழக்குப்பதிந்துள்ளது காவல்துறை.
First published: August 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading