அமிர்தசரஸ் அருகே வெடிகுண்டு தாக்குதல் - மூவர் உயிரிழப்பு

அமிர்தசரஸ் அருகே வெடிகுண்டு தாக்குதல் - மூவர் உயிரிழப்பு
தாக்குதல் நடத்தப்பட்ட இடம்
  • News18
  • Last Updated: November 18, 2018, 4:38 PM IST
  • Share this:
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் உள்ள நிரங்கரி பவனில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே உள்ள ராஜசன்சி கிராமத்தில் நிரங்கரி பவன் என்ற ஆன்மீக மையம் உள்ளது. இங்கு வழிபாட்டுக்காக ஏராளமானோர் இன்று திரண்டிருந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற சிலர் வெடிகுண்டுகளை வீசிச் சென்றதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உடனடியாக நிகழ்விடத்திற்கு சென்ற காவல்துறையினர், நிரங்கரி பவன் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர்.


Also see...

First published: November 18, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்