Home /News /national /

காஷ்மீரில் 24 மணி நேரத்தில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை- கடுமைகாட்டும் மத்திய அரசு

காஷ்மீரில் 24 மணி நேரத்தில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை- கடுமைகாட்டும் மத்திய அரசு

ஆயுதங்கள்

ஆயுதங்கள்

காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

    காஷ்மீர் எல்லைப் பகுதியில் ட்ரோன் ஊடுருவல் அதிகரித்தல் மற்றும் கையெறி குண்டு மிரட்டல் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உயர்மட்ட ஆலோசனை நடத்திய நிலையில் கடந்த 24 மணி நேரத்திற்குள் ஜம்மு காஷ்மீர் பகுதியில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 3 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். ஒருவர் அடையாளம் காணப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

    காஷ்மீரில் எல்லை ஊடுருவலுக்கு எதிராக ஜீரோ சகிப்புத்தன்மையற்ற கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு அழுத்தம் கொடுத்துவருகிறது. பிரதமர் மோடியின் வளமான மற்றும் அமைதியான ஜம்மு காஷ்மீர் என்ற தொலைநோக்கு பார்வைக்கு இந்த ஜீரோ சகிப்புத்தன்மையற்ற கொள்கை தேவைப்படுகிறது என்று அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.

    காவல்துறை அளித்த தகவலின்படி, ‘ராணுவம், மத்திய ஆயுதப் படை, ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை ஒரே நேரத்தில் நடத்திய ஆப்ரேஷனின் காரணமாக நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஏகே - 56 உள்ளிட்ட அதிக அளவிலான ஆயுதங்கள், கையெறிகுண்டுகள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெறவுள்ள அமர்நாத் யாத்திரையை பாதுகாப்பு ஏற்பாட்டை முன்னிட்டு இந்த 15 நாட்களுக்குள் இரண்டு உயர்மட்ட கூட்டத்தை அமித் ஷா நடத்தியுள்ளார். ட்ரோன் மற்றும் கையெறி குண்டு தாக்குதலுக்கு எதிராக தொழில்நுட்பங்களை ஆயுதப் படையினர் பயன்படுத்த வேண்டும் என்பதை செவ்வாய் கிழமை நடைபெற்ற கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

    அதேபோல, தேசிய புலனாய்வு அமைப்பு, மத்திய தொழிற்பாதுகாப்பு படை, தேசிய பாதுகாப்பு படை மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை ஆகிய பிரிவுகளின் தலைமைகளுடன் உள்துறைச் செயலாளர் தனியாக ஒரு கூட்டம் நடத்தியுள்ளார். அவர்களும் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து ஆலோசனை செய்துள்ளனர்.

    திரைப்பட பாணியில் சென்னையில் கேங் வார்... நள்ளிரவில் இளைஞரை படுகொலை செய்த கும்பல்- 5 பேர் கைது

    இந்த வாரத்தின் தொடக்கத்தில் அஜித் தோவல், உளவு அமைப்பான ராவின் தலைவரான சாம்நாத் கோயெல் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, மே மாதத்திலிருந்து காஷ்மீரில் கொலைகள் அதிகரித்துள்ள நிலையில் அங்கு மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Jammu and Kashmir

    அடுத்த செய்தி