புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய வடமாநில ஊழியர்களை மட்டும் பணி நிரந்தரம் செய்து கிரண்பேடி உத்தரவிட்டிருப்பது தற்போது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பதவி வகித்தபோது அரசு துறைகளில் பணியாற்றிய ஊழியர்கள் பிரதிநிதிகள் பரிந்துரையின் அடிப்படையில் ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்தனர். ஆளுநர் மாளிகையில் அதிக செலவு ஏற்படுகிறது என்றும் அதிக அளவில் ஊழியர்கள் இருப்பதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியிருந்தார்.
இதனால் பல ஊழியர்கள் அவர்களது தொழிலுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதில் வட மாநிலத்தை சேர்ந்த 3 ஊழியர்களை ஆளுநர் திரும்ப ஆளுநர் மாளிகைக்கு அழைத்ததுடன் அவர்களை பணி நிரந்தரம் செய்து 15 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளார். வடமாநில ஊழியர்களை மட்டும் கிரண்பேடி நிரந்தரம் செய்து அதற்கான ஆணையை பிறப்பித்துள்ளார்.
அதேநேரத்தில் புதுச்சேரியில் 10000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பல மாதங்களாக சம்பளம் இன்றியும் பதவி உயர்வும் இன்றி பணியாற்றி வரும் நிலையில் வடமாநில ஊழியர்களுக்கு மட்டும் கிரண்பேடி
சலுகை செய்திருப்பதாக அரசு ஊழியர்கள் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
இது குறித்து பாப்ஸ்கோ ஊழியர் பார்த்தீபன் கூறுகையில், பல மாதங்களாய் சம்பளம் வழங்கப்படவில்லை.பணி நிரந்தமில்லை..சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்த போராட்டம் மற்றும் கோரிக்கைகளுக்கு கிரண்பேடி செவிசாய்க்கவில்லைஎன புகார் கூறினார். அரசு ஊழியர்கள் சம்மேளனத்தின் கவுரவத்தலைவர் சேஷாச்சலம்,ஆளுநர் மாளிகையில் பரோட்டா போட்ட ஊழியர்களுக்காக சட்ட விதிகளை மாற்றி பணி நிரந்தம் அளிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.