முகப்பு /செய்தி /இந்தியா / INS Ranvir போர்க்கப்பலில் வெடி விபத்து - 3 கடற்படை வீரர்கள் உயிரிழப்பு

INS Ranvir போர்க்கப்பலில் வெடி விபத்து - 3 கடற்படை வீரர்கள் உயிரிழப்பு

INS RANVIR

INS RANVIR

INS Ranvir போர்க்கப்பல் விபத்து குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

  • Last Updated :

மும்பை அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த போர்க்கப்பலில் திடீரென நிகழ்ந்த வெடி விபத்தில், கடற்படை வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.

மும்பை கடற்படையின் கப்பல்களை நிறுத்தி வைக்கப்படும் துறைமுக பகுதியில் INS Ranvir என்ற போர்க்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இக்கப்பலில் கடற்படை வீரர்கள் பணியில் இருந்தனர். இந்நிலையில் கப்பலின் உள்பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்தவுடன் கடற்படை வீரர்கள் அப்பகுதிக்கு சென்று துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்நிலையில் துரதிர்ஷ்டவசமான இந்த விபத்தில் 3 கடற்படை வீரர்கள் உயிரிழந்ததாகவும், இன்னும் சில வீரர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆயுதங்கள் அல்லது வெடிமருந்து வெடிப்பு ஏது நிகழவில்லை மேலும் கப்பலுக்கு வேறு எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read:  பாஜகவின் பதிலடி - கடும் அதிர்ச்சியில் அகிலேஷ் யாதவ்...

இந்த விபத்து குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஐஎன்எஸ் ரன்வீர் போர்க்கப்பல்கள் இந்திய கடற்படையின் முக்கிய போர்க்கப்பலாக விளங்கி வருகின்றன. சோவியத் யூனியனில் கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் ரன்வீர் போர்க்கப்பல்கள் முதன் முதலாக 1986ம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டன.

top videos

    நீர்மூழ்கிக் கப்பல்கள், குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளுக்கு எதிராக பாதுகாப்பிற்கான விமான எதிர்ப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் போன்ற பாதுகாப்பை ரன்வீர் வகை போர் கப்பல்கள் பெற்றிருக்கின்றன.

    First published:

    Tags: Indian Navy, Mumbai