கேரளாவில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு. இவர்களையும் சேர்த்து மொத்தம் 18 பேருக்கு இதுவரை ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரளா சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
கேரளாவில் ஏற்கனவே கொரோனா உச்சக்கட்ட பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அங்கு நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 14,000 என்ற அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்திற்கு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது ஜிகா வைரஸ் பாதிப்பு. தற்போது மழைக்காலம் என்பதால் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக ஜிகா வைரஸ் பாதிப்பும் அங்கும் அதிகரித்திருக்கிறது.
அதிலும் கேரள- தமிழ் நாடு எல்லையான பாறசாலை பகுதியில் 24 வயதான கர்ப்பிணி ஒருவருக்கு முதன்முதலில் ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியானது. அவரைத் தொடர்ந்து கேரளாவில் மேலும் 15 பேர் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Also Read: பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து எல்.முருகனை நீக்கியது அவருக்கு செய்த அவமதிப்பு - திருமாவளவன் கருத்து!
இந்நிலையில் கோயம்புத்தூர் ஆய்வகத்தில் பரிசோதனை மேற்கொண்டதில் இரண்டு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் 10 வயது சிறுமி என மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதியானது. இத்துடன் கேரளாவில் 18 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகி இருக்கிறது..
நான்கு மாதம் வரையுள்ள கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், கர்ப்பம் தரித்துள்ளவர்கள் காய்ச்சல் ஏற்பட்டால் உடனே ஜிகா வைரஸ் இருக்கிறதா என பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜிகா வைரஸைக் கண்டறிவதற்கான ஆய்வுக்கூடங்கள் அதிகரிக்கப்படும் என்றும் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
இதனிடையே கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து தமிழக எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தபப்ட்டுள்ளன.
வாளையாறு சோதனைச் சாவடியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரண் நேற்று ஆய்வு மேற்கொண்டார். கேரளாவில் கொரோனா மற்றும் ஜிகா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலியாக கேரளா எல்லையில் உள்ள 13 சோதனை சாவடிகள் மூடப்பட்டது. இ-பதிவு இருந்தால் மட்டுமே கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்குள் வர அனுமதி வழங்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரண் அறிவிப்பு வெளியிட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதேபோல, கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் பகுதியில், மாவட்ட ஆட்சியர் அரவிந்த் சக அதிகாரிகளுடன் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார். அப்போது, உடனிருந்த மருத்துவ பணியாளர்கள் பொதுமக்களின் உடல்நிலை குறித்த தகவல்களை கேட்டறிந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, Kerala, Zika Virus