ஹோம் /நியூஸ் /இந்தியா /

3 மணி நேர தீவிர சிகிச்சை... ஒரே நபர் கிட்னியில் இருந்து 156 கற்களை அகற்றி மருத்துவர்கள் சாதனை

3 மணி நேர தீவிர சிகிச்சை... ஒரே நபர் கிட்னியில் இருந்து 156 கற்களை அகற்றி மருத்துவர்கள் சாதனை

பாதிக்கப்பட்ட நபரிடத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கற்கள் உருவாகியுள்ளது. முதலில் எந்த அறிகுறியும் தென்படாத சூழலில் கடந்த சில வாரங்களாக வலி அதிகரித்ததன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து ஐதராபாத் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் 3 மணி நேரம் எண்டோஸ்கோப்பி சிகிச்சை மேற்கொண்டு, 156 கற்களை வெளியே எடுத்துள்ளனர். தற்போது தான் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக, பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் பசவராஜ். 50 வயதான இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவருக்கு அடி வயிறு வலி தீவிரமாக ஏற்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவில், சிறுநீரகத்தில் அதிக எண்ணிக்கையில் கற்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மேலும் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, எண்டோஸ்கோப்பி மற்றும் லேப்ரோஸ்கோப்பி முறையை பயன்படுத்தி, 3 மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் முடிவில் மருத்துவர்கள் வெற்றிகரமாக 156 கற்களை வெளியே எடுத்தனர். இந்த நடைமுறையைப் பயன்படுத்தி நாட்டில் ஒரு நோயாளியிடமிருந்து அதிக எண்ணிக்கையிலான கற்கள் அகற்றப்பட்டது இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுநீர் பாதையில். சாதாரண நிலைக்கு பதிலாக வயிற்றுக்கு அருகில் கற்கள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சாதாரண நபர்களை விட, நோயாளிக்கு வித்தியாசமான சிறுநீரகம் இருப்பதாக கூறிய மருத்துவர்கள், இதனால் பிரச்னை இல்லை என்றும், வித்தியாசமான சிறுநீரகத்தில் இருந்து கற்களை அகற்றுவது தான் சவாலாக இருந்தது என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க : இந்தியாவில் அதிகரிக்கும் ஒமைக்ரான் பரவல்: புதிதாக 9 பேருக்கு தொற்று உறுதி

பாதிக்கப்பட்ட நபரிடத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கற்கள் உருவாகியுள்ளது. முதலில் எந்த அறிகுறியும் தென்படாத சூழலில் கடந்த சில வாரங்களாக வலி அதிகரித்ததன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

இதையும் படிங்க : 4 வெளி நாடுகளின் செயற்கை கோள்களை விண்ணில் அனுப்ப இஸ்ரோ ஒப்பந்தம் : மத்திய அரசு தகவல்

இதையும் படிங்க : இயற்கை விவசாயத்தை மக்கள் இயக்கமாக மாற்ற ஒவ்வொரு மாநில அரசும் முன்வரவேண்டும் : பிரதமர் மோடி வலியுறுத்தல்

First published:

Tags: Kidney Stone