முகப்பு /செய்தி /இந்தியா / சென்னையிலிருந்து திருப்பதிக்கு சென்ற கார் மீது மோதிய ஆயில் டேங்கர்- சம்பவ இடத்திலேயே மூவர் பலி

சென்னையிலிருந்து திருப்பதிக்கு சென்ற கார் மீது மோதிய ஆயில் டேங்கர்- சம்பவ இடத்திலேயே மூவர் பலி

விபத்து ஏற்பட்ட கார்

விபத்து ஏற்பட்ட கார்

விபத்தில் கார் முழுவதுமாக நசுங்கி அதில் பயணித்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirupati, India

சென்னை திருப்பதி வழித்தடத்தில் ஆயில் டேங்கர், கார் மோதி ஏற்பட்ட சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த மூன்று பேர் பலியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த மூன்று பேர் கார் ஒன்றில் திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பயணித்த கார் இன்று காலை ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் வேகமாக வந்து கொண்டிருந்த ஆயில் டேங்கர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்தில் கார் முழுவதுமாக நசுங்கி அதில் பயணித்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். விபத்து பற்றிய தகவல் அறிந்து அங்கு சென்ற நகரி போலீசார் மரணமடைந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் விபத்தில் மரணம் அடைந்த மூன்று பேர் பற்றிய விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

செய்தியாளர் : புஷ்பராஜ், திருப்பதி.

First published:

Tags: Car accident, Chennai, Tirumala Tirupati