ஹோம் /நியூஸ் /இந்தியா /

இரண்டாவதும் பெண் குழந்தை... பெற்ற குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தாய்..!

இரண்டாவதும் பெண் குழந்தை... பெற்ற குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தாய்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சமூகத்தில் பிற்போக்கான சிந்தனைகள் மறைந்து வரும் இக்காலத்தில் பெண் குழந்தை என்பதால் பெற்ற தாயே அந்த குழந்தையை கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Maharashtra, India

இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால் பெற்ற தாயே தனது 3 நாள் குழந்தையை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உஸ்மானாபாத்தில் ஹோலியில் வசிக்கும் 25 வயதான பெண்ணுக்கு, காசர் ஜவாலா கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே பெண் குழந்தை இருந்த நிலையில் 2-வது குழந்தையும் பெண்குழந்தையாக பிறந்ததால் மனமுடைந்த அந்த பெண், கடந்த டிசம்பர் 29 அன்று குழந்தையை கைக்குட்டையால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

குழந்தை இறந்ததையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் குழந்தையின் உடலை மீட்டு விசாரணை செய்து வந்தனர். இதற்கிடையில் குழந்தையின் தாயார் தான் ஒன்றும் செய்யாதது போல மிகவும் இயல்பாக இருந்துள்ளார்.

இதையடுத்து போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் தாயே குழந்தையைக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பெண்ணை போலீசார் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூகத்தில் பிற்போக்கான சிந்தனைகள் மறைந்து வரும் இக்காலத்தில் பெண் குழந்தை என்பதால் பெற்ற தாயே அந்த குழந்தையை கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: India, Maharashtra