• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • லக்கிம்பூர் விவகாரம்: மத்திய அமைச்சரின் மகனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்

லக்கிம்பூர் விவகாரம்: மத்திய அமைச்சரின் மகனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்

லக்கிம்பூர் வன்முறை

லக்கிம்பூர் வன்முறை

லக்கிம்பூர் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

  • Share this:
    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கார் மோதியதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மேலும் 4 பேர் உயிரிழந்தனர்.

    காரை மோதச் செய்ததாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். இச்சம்பத்தில், ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறை இரு முறை சம்மன் அனுப்பிய நிலையில் காவல் துறை முன் ஆஷிஷ் மிஸ்ரா சனிக்கிழமை ஆஜரானார்.

    12 மணிநேரம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, அவரை போலீஸார் கைதுசெய்தனர். விசாரணையின்போது, ஆஷிஷ் மிஸ்ரா போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், சில கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் டிஐஜி உபேந்திர அகர்வால் தெரிவித்திருந்தார்.

    நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆஷிஷ் மிஸ்ரா, 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், மிஸ்ராவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, லக்கிம்பூர் கெரி நீதிமன்றத்தில் திங்கட்கிழமை மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக போலீஸார் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஷிஷ் மிஸ்ராவை காவல்துறையினர் மீண்டும் ஆஜர்படுத்தினர். அப்போது, காவல்துறை தரப்பில் வழக்கு குறித்து ஆஷிஷ் மிஸ்ராவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பதால் போலீஸ் காவல் கேட்கப்பட்டது. காவல்துறையின் கோரிக்கையை ஏற்று ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: