விபசார விடுதிக்கு சென்றவர்களுக்கு, இந்தியாவிலேயே முதன்முறையாக தண்டனை விதிப்பு!

விபசார விடுதிக்கு சென்றோருக்கு நாட்டிலேயே முதன்முறையாக தண்டனை அளித்ததற்காக சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

விபசார விடுதிக்கு சென்றவர்களுக்கு, இந்தியாவிலேயே முதன்முறையாக தண்டனை விதிப்பு!
மாதிரி படம்
  • News18
  • Last Updated: November 18, 2019, 9:40 PM IST
  • Share this:
இந்தியாவில் விபசார விடுதிக்கு சென்ற மூவருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை ஆகும்.

மேற்குவங்கத்தின் மித்நாப்பூர் மாவட்டத்தில் விபசார விடுதிக்கு சென்றதற்காக ஆள் கடத்தல் மற்றும் பாதுகாத்தல் சட்டப்பிரிவின் கீழ் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தின் ஹல்தியா நீதிமன்றம் இத்தீர்ப்பை நாட்டிலேயே முதன்முறையாக பிறப்பித்துள்ளது.

விபசார விடுதி நடத்திய பச்சா மற்றும் மேலாளர் சஹாதேவ் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 47 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றிய 5 ஊழியர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


ஆனால், நாட்டிலேயே முதன்முறையாக விபசார விடுதிக்கு சென்றதற்காக பிரேன், கொகோன் மொண்டல், பபிதாஸ் ஆகிய மூவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. விபச்சாரத்தை ஊக்குவித்த காரணத்துக்காக இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விருப்பம் இல்லாதவர்களைக் கடத்திவந்து இதுபோன்று விபசாரத்தில் தள்ளுவது பெரும் குற்றச்செயல். இதற்கான சட்ட நடைமுறைகள் கடுமையாகி உள்ளதால் விடுதிக்கு சென்றோருக்கு நாட்டிலேயே முதன்முறையாக தண்டனை அளித்ததற்காக சமூக ஆர்வலர்கள் பாராட்டிகள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பார்க்க: ஏர்டெல், வோடபோன் கட்டணங்கள் உயர்கின்றன... டிசம்பர் 1 முதல் அமல்

Loading...

First published: November 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
Listen to the latest songs, only on JioSaavn.com