ஹோம் /நியூஸ் /இந்தியா /

10 நாட்களுக்குள் அடுத்தடுத்து பலியான 3 குட்டி யானைகள்.. கேரளாவில் அதிர்ச்சி!

10 நாட்களுக்குள் அடுத்தடுத்து பலியான 3 குட்டி யானைகள்.. கேரளாவில் அதிர்ச்சி!

அடுத்தடுத்து 3 குட்டி யானைகள் உயிரிழப்பு

அடுத்தடுத்து 3 குட்டி யானைகள் உயிரிழப்பு

Kerala elephant died | அடுத்தடுத்து 3 யானை குட்டிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India

மூணாரில்  வனப்பகுதியில்  10 நாட்களுக்குள் அடுத்தடுத்து மூன்று குட்டி யானைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலா தலமான முணாறு வனப்பகுதியில் வன விலங்குகள் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக யானைகள் இங்கு அதிக எண்ணிக்கையில் உள்ளன. மூணாரில்  வரும் சுற்றுலா பயணிகள் குட்டிகளுடன் வரும் யானை கூட்டத்தை கண்டு ரசிப்பது வழக்கம். இந்நிலையில் மூணாரு தேவிகுளம் வனச்சாரகத்திற்கு உட்பட்ட புதுக்கடி வனப்பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு குட்டி யானையும் அதே போல குண்டலா வனப்பகுதியில் 2 வயதில் இரண்டு குட்டி குட்டி யானைகள் என மூன்று குட்டி யானைகள் உயிரிழந்த நிலையில் சடலமாக வனத்துறையால் மீட்கப்பட்டது.

இந்த குட்டி யானைகள் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடற்கூராய்வின் முதல் கட்ட ஆய்வு அறிக்கையில் முதலில் இறந்த குட்டி யானைக்கு உள் உறுப்புகளில் ஹெர்ப்பிஸ் எனும்  தொற்று காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

இருப்பினும்  உயிரிழப்புக்கு காரணம் என்ன என்று கண்டறிய கூடுதல் ஆய்விற்கு இறந்த யானைகள் உள் உறுப்புகள் காக்கநாடு கெமிக்கல் ஆய்வகத்தில் அனுப்பி உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இந்த ஆய்வு முடிவுகள் வந்த பிறகு தான் உயிரிழப்பிற்கு காரணம் என்ன என்று தெரிய வரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அடுத்தடுத்து யானைகள் உயிரிழந்த நிலையில் வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Elephant, Elephant and calf, Kerala