இந்தியாவில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3.89 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 37 ஆயிரத்து 704 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 89 லட்சத்து 03 ஆயிரத்து 731 ஆக அதிகரித்துள்ளது.
Also read: பாகிஸ்தான் சிதைந்துவிடும், இம்ரான் கான் ஐஎஸ்ஐ கைப்பாவை - தாலிபான்கள் கடும் தாக்கு
இதுவரை இல்லாத அளவாக கொரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21 லட்சத்து 13 ஆயிரத்து 365 ஆக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்த பாதிப்பில் 5.43 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். குணமடைவோர் சதவீதம் படிப்படியாகக் குறைந்து 93.31 சதவீதமாக சரிந்துள்ளது.
கொரோனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 488 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 88 ஆயிரத்து 884 ஆக அதிகரித்துள்ளது.
ஒமைக்ரான் பரவலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்து 10,050 ஆக அதிகரித்துள்ளது'' என்று தெரிவித்துள்ளது.
Also read: உ.பி தேர்தல்: முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா பிரியங்கா காந்தி?இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.