Home /News /national /

தேர்வுத் தாளில் ₹500 லஞ்சம் வைத்த 12ம் வகுப்பு மாணவன் - ஒரு வருடம் தேர்வு எழுதத் தடை.

தேர்வுத் தாளில் ₹500 லஞ்சம் வைத்த 12ம் வகுப்பு மாணவன் - ஒரு வருடம் தேர்வு எழுதத் தடை.

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Gujarat Student Bribes Teacher :குஜராத் மாநிலத்தில் நடந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவன் வேதியியல் மற்றும் இயற்பியல் தேர்வில் பாஸ் ஆக வேண்டும் என்று 500 ரூபாயை லஞ்சமாகத் தேர்வுத் தாளில் வைத்துத் தந்துள்ளான்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    12ம் வகுப்பு மாணவன் பொதுத் தேர்வில் தன்னை தேர்ச்சி செய்யுமாறு வேண்டி 500 ரூபாயை லஞ்சமாக விடைத்தாளில் வைத்துக் கொடுத்துள்ளான். இந்த சம்பவத்தினால் அந்த மாணவன் ஒரு வருடம் பொதுத் தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    குஜராத் மாநிலத்தில் நடந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவன் வேதியியல் மற்றும் இயற்பியல் தேர்வில் பாஸ் ஆக வேண்டும் என்று 500 ரூபாயை லஞ்சமாகத் தேர்வுத் தாளில் வைத்துத் தந்துள்ளான். இந்த நிகழ்வு விடைத்தாள் திருத்திய போது ஆசிரியர்களால் கவனிக்கப்பட்டு உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்ட மாணவனை விசாரித்துள்ளனர். அதில் மாணவன் தேர்வுத் தாளில் பணம் வைத்தால் பாஸ் ஆக்கிவிடுவார்கள் என்று நண்பர்கள் சொன்னதைக் கேட்டு இதைச் செய்து விட்டேன் என்று கூறியுள்ளான். மேலும் குஜராத் பள்ளிக் கல்வித் துறை அந்த மாணவனை ஒரு வருடம் தேர்வு எழுத தடை விதித்துள்ளனர்.

    Also Read : கர்நாடகாவில் தயாரிக்கப்பட்டுள்ள 140 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட தேசியக்கொடி!

    மாணவன், தான் நன்றாக படித்ததாகவும் ஆனால் பாஸ் ஆக மாட்டேனோ என்ற பயத்தில் நண்பர்கள் சொன்னதைக் கேட்டு இப்படிச் செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளான். மேலும் 2 பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மறுமுறை தேர்வு எழுத அனுமதித்த போதும் இந்த மாணவன் ஒரு வருடத்திற்குத் தேர்வு எழுதக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

    மேலும் தற்போது குஜராத்தில் நடந்த பொது தேர்வில் இந்த மாணவனுடன் இணைந்து 21 மாணவர்கள் தேர்வு விதியை மீறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
    Published by:Janvi
    First published:

    Tags: Bribe, Gujarat, Public exams, School student

    அடுத்த செய்தி