• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பீகாரில் நாளை 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது..

பீகாரில் நாளை 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது..

பிதமர் மோடி - நித்திஷ் குமார்

பிதமர் மோடி - நித்திஷ் குமார்

பீகாரில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இதையடுத்து நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

  • Share this:
    பீகார் சட்டப் பேரவை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் 243 தொகுதிகளில், கடந்த 28-ம் தேதி 71 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, செவ்வாய்கிழமை இரண்டாம் கட்டமாக 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

    இரண்டாம் கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். சரன் மாவட்டத்தில் உள்ள சாப்ரா நகரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் நிதிஷ் குமார் பங்கேற்றனர். அப்போது, பாஜக மற்றும் ஐக்கிய ஜனத தள கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பேசிய பிரதமர், முதல் கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னரே நிதிஷ் குமார் மீண்டும் ஆட்சியமைப்பது தெளிவாகியுள்ளது என்றார்.மேலும், புல்வாமா தாக்குதலின் போது தேசத்தை தவறாக வழிநடத்தியவர்கள் தற்போது மக்களிடம் வாக்கு கேட்டு வருவதாக காங்கிரசை விமர்சித்தார்.

    இதையடுத்து, சமஸ்திபூரில் (Samastipur) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றார். அப்போது பேசுகையில், இங்கு கூடியுள்ள கூட்டமே, பீகாரில் தேசிய ஜனநாய கூட்டணியின் வெற்றியை உறுதி செய்வதாக அமைந்துள்ளது என்றார்.

    இதைத்தொடர்ந்து மோட்டிஹரி கூட்டத்தில் பேசிய பிரதமர், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சொத்துகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவோம் என உறுதியளித்தார். அத்துடன், நிதிஷ் குமாரும், தானும், தங்களது குடும்பத்தில் இருந்து யாரையும் எம்.பி.-யாகவோ, எம்எல்ஏ-யாகவோ ஆக்கவில்லை என்று வாரிசு அரசியல் குறித்து விமர்சித்தார்.

    இதனிடையே, பாட்னாவில் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும், காங்கிரஸ் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி, நிதிஷ் குமாருக்கு அரசியலில் இருந்து பீகார் மக்கள் ஓய்வளிப்பார்கள் என கூறினார்.

    மேலும், தற்போது பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்திற்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்று லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே பிரதமர் மோடி, அதிக பிரசாரங்களில் பங்கேற்பவதாகவும் விமர்சித்துள்ளார்.

    மேலும் படிக்க...முதலாமாண்டு மாணவர்களுக்கான பொறியியல் வகுப்புகள் நவம்பர் 23-ஆம் தேதி தொடக்கம்.. பருவத் தேர்வுகள் எப்போது?



    இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 3-ம் தேதி நடைபெறவுள் நிலையில், அதற்கான பிரச்சாரம் மாலையுடன் ஓய்ந்தது. இதையடுத்து, இரட்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும், 3-வது மற்றும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 7-ம் தேதி நடைபெறவுள்ளது. பின்னர், 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: