Arvind Kejriwal: கொரோனா 3வது அலை உக்கிரமாக இருக்கலாம்: அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

இரண்டாம் அலை பரவலின் போது மிக மோசமான ஆக்ஸிஜன் பற்றாக்குறையையும், அதன் காரணமாக அதிகபட்ச உயிரிழப்புகளையும் டெல்லி சந்திக்க நேர்ந்தது.

  • Share this:
டெல்லியில் கொரோனா 2வது அலையால் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகபட்சமாக 28,000 என்ற அளவில் இருந்த நிலையில், 3வது அலை தொற்றினால் ஒரு நாளைக்கு 37,000 பேர் பாதிக்கப்படலாம் என்ற உத்தேசத்தில் டெல்லி அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா பரவலின் 3வது அலையை எதிர்கொள்வது குறித்து கடந்த வெள்ளிக்கிழமையன்று, சுகாதார மற்றும் பிற துறை அதிகாரிகளுடன் 6 மணி நேரம் கூட்டம் ஒன்றை நடத்தியதாகவும் இதனையடுத்து, இந்த கூட்டத்தின் வாயிலாக டெல்லி அரசு எடுக்கப்படவிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொலி காட்சி வாயிலாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பத்ரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இரண்டாவது அலை பரவலின் போது டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை அதிகபட்சமாக 28,000 என்ற அளவில் இருந்தது, ஆனால் 3வது அலை பரவலின் போது உச்சகட்ட பாதிப்பு 37,000 ஆக இருக்கும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கேற்ற வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொள்ள உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் முக்கியமானதாக ஆக்ஸிஜன் பற்றாக்குறையை தவிர்ப்பதற்காக டெல்லியில், அடுத்த சில வாரங்களில் 64 ஆக்ஸிஜன் தயாரிக்கும் ஆலைகள் நிறுவப்படும் எனவும், 25 ஆக்ஸிஜன் டேங்கர்கள் கொள்முதல் செய்யப்படும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். இரண்டாம் அலை பரவலின் போது மிக மோசமான ஆக்ஸிஜன் பற்றாக்குறையையும், அதன் காரணமாக அதிகபட்ச உயிரிழப்புகளையும் டெல்லி சந்திக்க நேர்ந்தது.

கொரோனா 3வது அலை


இது தவிர, வைரஸின் மரபணுவை கண்டறிவதற்காக இரண்டு மரபணு கண்டறியும் மையங்கள் டெல்லியில் அமைக்கப்படும் என கெஜ்ரிவால் தெரிவித்தார். இதில் ஒன்று லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையிலும், மற்றொன்று கல்லீரல் மற்றும் பிலியரி அறிவியல் மையத்தில் ஏற்படுத்தப்படும் எனவும் முதல்வர் கூறினார்.

டெல்லி ஒரு தொழிற்துறை மாநிலம் கிடையாது என்பதால் எங்களிடம் சொந்தமாக ஆக்ஸிஜன் டேங்கர்கள் கிடையாது, இருப்பினும் முந்தைய கொரோனா பரவல் போன்ற நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு 25 ஆக்ஸிஜன் டேங்கர்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் கெஜ்ரிவால்.

Also Read:   விராட் கோலியை திகிலூட்டிய அந்த ஒரு ஓவர்.. காரணம் மகேந்திர சிங் தோனி தான்!

மேலும் 420 டன் கொள்ளவும் கொண்ட ஆக்ஸிஜன் சேமிப்பு கிடங்கி ஒன்றையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அவசியமான மருந்துகளை சேமித்து வைக்குமாறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read:   எல்லா காலத்திலும் சிறந்த வீரராக அஸ்வினை ஏற்க முடியாததற்கு இது தான் காரணம் - சஞ்சய் மஞ்சரேக்கர்!

3ம் அலை பரவலால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படலாம் என கூறப்படுவதால் அதனை தவிர்க்க தேவையான ஆலோசனைகளை கூறுவதற்கான வல்லுநர் குழு ஒன்றை அரசு அமைத்திருக்கிறது.

குறிப்பாக குழந்தைகளை கொரோனா தொற்றில் இருந்து காக்கவும், சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ கட்டமைப்பை ஏற்படுத்தவும் டெல்லி மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Published by:Arun
First published: