ஹோம் /நியூஸ் /இந்தியா /

29 லட்சத்தை தாண்டியது சபரிமலை பக்தர்கள் எண்ணிக்கை.. வருவாய் இத்தனை கோடியா?

29 லட்சத்தை தாண்டியது சபரிமலை பக்தர்கள் எண்ணிக்கை.. வருவாய் இத்தனை கோடியா?

சபரிமலை

சபரிமலை

Sabarimalai: கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், பக்தர்கள் சன்னிதானத்துக்குள் படிப்படியாக அனுமதிக்கப்படுகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pathanamthitta | Kerala

சபரிமலைக்கு இதுவரை 29 லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சபரிமலையில் மண்டல பூஜையை ஒட்டி நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. நாளை சபரிமலையில் மண்டல பூஜை நடைபெறுவதால் பக்தர்கள் சபரிமலையை நோக்கி படையெடுக்கின்றனர். சன்னிதானத்தில் இவ்வாண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும் தரிசனம் செய்யவும், பக்தர்களுக்கு வழிபாடுகள் செய்யவும் சிரமம் ஏற்படாமல் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்த கோபன் சன்னிதானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  சபரிமலைக்கு இந்த ஆண்டு இதுவரை வருமானமாக ரூ. 222 கோடியே 98 லட்சம் கிடைத்துள்ளதாகவும், 29 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்துள்ளதாகவும், அவர்களில் 20 சதவீதம் பேர் குழந்தைகள் எனவும் தெரிவித்தார்.

கடந்த 2 ஆண்டுகள்  கட்டுப்பாடுகள் இருந்த காரணத்தினாலே குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் பேசினார்.

First published:

Tags: Sabarimalai, Sabarimalai Ayyappan temple