Home /News /national /

உயரம் காரணமாக வேலையின்றி தவித்த எம்பிஏ பட்டதாரி - உதவிக்கரம் நீட்டி வேலை பெற உதவிய காங்கிரஸ் எம்எல்ஏ

உயரம் காரணமாக வேலையின்றி தவித்த எம்பிஏ பட்டதாரி - உதவிக்கரம் நீட்டி வேலை பெற உதவிய காங்கிரஸ் எம்எல்ஏ

வேலை பெற உதவிய காங்கிரஸ் எம்எல்ஏ

வேலை பெற உதவிய காங்கிரஸ் எம்எல்ஏ

உயரத்தை காரணம் காட்டி வேலை கிடைக்காமல் தவித்து வந்த எம்பிஏ பட்டதாரி அன்கேஷுக்கு அப்பகுதி எம்எல்ஏ முயற்சியால் உடனடியாக நல்ல வேலை கிடைத்துள்ளது.

  • News18
  • Last Updated :
    உயரத்தை காரணம் காட்டி வேலை கிடைக்காமல் தவித்து வந்த எம்பிஏ பட்டதாரி அன்கேஷுக்கு அப்பகுதி எம்எல்ஏ முயற்சியால் உடனடியாக நல்ல வேலை கிடைத்துள்ளது.

    மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்தவர் அன்கேஷ் கோஸ்தி. 28 வயதான் அன்கேஷ் எம்.பி.ஏ பட்டதாரி ஆவார். நன்கு படித்திருந்தும் இவர் குள்ள மனிதர் என்ற காரணத்திற்காக எந்த நிறுவனமும் இன்டர்வியூவின் போது இவரது உயரத்தை காரணம் காட்டி வேலைத் தர மறுத்து வந்துள்ளன. இதன் காரணமாக விரக்தி அடைந்த அன்கேஷ் தனது பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ பிரவீன் பதக் என்பவரிடம் உதவியை நாடியுள்ளார்.

    இவரது கோரிக்கையை செவி கொடுத்த கேட்ட எம்எல்ஏ பிரவீன் இவரது திறனையும் கோரிக்கையையும் ஒரு வீடியோ பதிவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து உடனடியாக அன்கேஷுக்கு நல்ல வேலை கிடைத்துள்ளது.

    இது தொடர்பாக எம்எல்ஏ பிரவீன் கூறுகையில், "அன்கேஷ் தனது தாயாருடன் என்னிடம் வந்து தனது குறைகளை கூறினார். எம்பிஏ படித்த பட்டதாரி உயரம் காரணமாக வேலைப் பெற முடியவில்லை என்பது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, அவருக்கு உடனடியாக வேலைக்கிடைக்க வேண்டும் என வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் போட்டேன். தற்போது அவருக்கு நல்ல வேலை கிடைத்துள்ளது. அவர் 'ஒரு நாள்' எம்எல்ஏ ஆக வைத்து பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். இதற்காக ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு அந்த நாளில் அவருக்கு வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளேன்" என்றார்.

    வேலை கிடைத்த மகிழ்ச்சி குறித்து பேசிய அன்கேஷ், "எம்பிஏ படித்து முடித்து பல நிறுவனங்களில் இன்டர்வீயூவில் பங்கேற்று வந்திருந்தேன். இருந்தாலும், அனைத்து நிறுவனங்களும் எனது உயரத்தை காரணம் காட்டி வேலை தர மறுத்து வந்தன. அப்போதுதான் எம்எல்ஏவை பார்த்தேன். அவர் என்னிடம் கட்சி தலைவர் போல் பழகாமல் ஒரு சகோதரர் போலவே பழகினார். அவர் எனக்கு உதவ முன்வந்து வீடியோ பதிவை போட்டார். அதன் பின் ஒரே நாளில் 35 முதல் 40 நிறுவனங்கள் வேலைக்காக தொடர்பு கொண்டன. தற்போது நல்ல வேலை கிடைத்து மகிழ்ச்சியாக உள்ளேன்" என்றார்.

    Also read... தொழிலதிபரை கடத்தி சொத்துக்களை எழுதி வாங்கியதாக பதிவான வழக்கு - காவல் உதவி ஆணையரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி

    மூன்று அடி ஏழு அங்குலம் உயரம் உள்ள அன்கேஷுக்கு உடன் பிறந்தவர்கள் இருவர் உள்ளனர். தந்தை டெய்லராகவும் தாயார் தொழில்சாலையிலும் பணிபுரிந்து வருகிறார். தனது மகனின் எதிர்காலம் குறித்து மிகுந்து கவலையில் இருந்ததாகவும் தற்போது வேலை கிடைத்ததும் மிகவும் நிம்மதியாக உள்ளதாகவும் தெரிவித்த அன்கேஷின் தாயார் தங்களுக்கு உதவிய எம்எல்ஏ பிரவீனுக்கு மிகுந்த நன்றி எனக் கூறினார்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Madhya pradesh

    அடுத்த செய்தி