Home /News /national /

ஒரே ஆட்டோவில் 27 பேர் சவாரி.. மிரண்டு போன போலீசார்.. இதெல்லாம் இந்தியாவில் மட்டும் தான் சாத்தியம்..!!

ஒரே ஆட்டோவில் 27 பேர் சவாரி.. மிரண்டு போன போலீசார்.. இதெல்லாம் இந்தியாவில் மட்டும் தான் சாத்தியம்..!!

ஒரே ஆட்டோவில் 27 பேர் பயணம்

ஒரே ஆட்டோவில் 27 பேர் பயணம்

Auto Viral Video : அதிகபட்சமாக 6 பேர் மட்டுமே பயணம் செய்யக் கூடிய ஆட்டோவில் 27 பேரை ஏற்றி சவாரி செய்து போலீசாரையே மிரள வைத்திருக்கிறார் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர்.

    உத்தரப் பிரதேசத்தில் ஆட்டோக்காரர் ஒருவர் தனது ஆட்டோவில் 27 பயணிகளை சவாரி ஏற்றி சென்றதை பார்த்து காவல்துறையினரே அதிர்ச்சி அடைந்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் பதேப்பூரில் உள்ள பிந்த்கி கோட்வாலி என்ற பகுதியில் இது நடைபெற்றுள்ளது. இங்கு ஒரு ஆட்டோ விதிகளை மீறி அதி வேகமாக சாலையில் சென்றுள்ளது. இதை கவனித்த உள்ளூர் காவல்துறை, அந்த வாகனத்தை சேஸ் செய்து போய் தடுத்து நிறுத்தியது.

    ஆட்டோவை எதற்காக இவ்வளவு வேகமாக ஓட்டி செல்கிறீர்கள், சவாரியை கீழே இறங்க சொல்லுங்கள் என காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநரிடம் கூறியுள்ளனர். அந்த ஆட்டோவில் இருந்து பயணிகள் ஒவ்வொருவராக கீழே இறங்கியதை பார்த்த போது தான் காவல்துறையினர் வாயடைத்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதிகபட்சமாக 6 பேர் மட்டுமே பயணம் செய்யக் கூடிய ஆட்டோவில் 27 பேரை ஏற்றி சவாரி செய்துள்ளார் இந்த ஆட்டோக்காரர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் இந்த 27 பேரில் அடக்கம்.


    மிரண்டு போன காவல்துறையினர் ஆட்டோவை பறிமுதல் செய்து, அபராதம் விதித்துள்ளனர். இந்த சம்பவத்தை சாலையில் சென்றுகொண்டிருந்த  நபர் ஒருவர் போனில் படம் பிடித்து சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதைத் தொடர்ந்து இந்த வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    இதையும் படிங்க: பாகுபலி சமோசா… 30 நிமிடத்தில் சாப்பிட்டு முடித்தால் ₹50,000 பரிசு..!

    இது போன்ற சம்பவங்கள் இந்தியாவில் மட்டும் தான் நடக்கும். அந்த ஆட்டோ ஓட்டுநர் எந்த கம்பெனி டயரை பயன்படுத்துகிறார் இவ்வாறு நெட்டிசன்கள் பலர் கமெண்டுகளை பதிவிட்டுவருகின்றனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Auto Driver, Uttar pradesh, Viral News, Viral Video

    அடுத்த செய்தி