மத்திய பட்ஜெட்டில் 26.3% செலவு இதுக்கு தானாம்: ஆர்.டி.ஐ-யில் வெளியான தகவல்!

RTI

பிஎம் கேர் ஃபண்ட்ஸ் நிதியில் இருந்து 6.6 கோடி டோஸ் கோவிஷில்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசி வாங்குவதற்காக 1398.82 கோடி ரூபாய் செலவு

  • Share this:
மத்திய பட்ஜெட்டில் 26.3 சதவீத தொகை எதற்காக செலவிடப்பட்டது என்ற தகவல் ஆர்.டி.ஐ எனப்படும் தகவல் பெரும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்திருக்கிறது.

கொரோனா தடுப்பூசி கொள்முதல் மற்றும் செலவீனங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவேக் பாண்டே என்பவரால் எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சகம் பதிலளித்திருக்கிறது.

மத்திய அரசு பட்ஜெட்டில் 35,000 கோடி ரூபாயை கொரோனா தடுப்பூசி போடும் பணிகளுக்காக ஒதுக்கியுள்ளது. இந்த ஒதுக்கீட்டில் இருந்து மத்திய அரசு 9,229.31 கோடி ரூபாய் அதாவது  பட்ஜெட்டில் தடுப்பூசிக்கான பங்கில் 26.3 சதவீதத்தை மூன்று நிறுவனங்களிடமிருந்து 124 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்காக பயன்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட்டிடம் இருந்து 21 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வாங்குவதற்காக 4410 கோடி ரூபாயும், பாரத் பயோடெக்கிடம் இருந்து 7 கோடி டோஸ் கோவேக்ஸின் வாங்குவதற்காக 157.50 கோடி ரூபாய் கடந்த மார்ச் மற்றும் ஜூலை மாத காலகட்டத்தில் செலவிடப்பட்டிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Also Read: காஷ்மீர் விவகாரத்தில் அந்தர் திடீர் பல்டி அடித்த தாலிபான்கள்!

தடுப்பூசிக்காக செலவிடப்பட்ட 9,229.31 கோடி ரூபாயில், ஹைதராபாத்தின் பயோலஜிக்கல் இ நிறுவனத்தின் 30 கோடி டோஸ் CORBEVAX தடுப்பூசிக்கான அட்வாட்ஸ் பணம் 1500 கோடி ரூபாயும் அடக்கம். CORBEVAX டோஸ் ஒன்றின் விலை 50 ரூபாய் என்ற விலையில் மத்திய அரசு வாங்குகிறது.

37.5 கோடி டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி கொள்முதலுக்காக சீரம் நிறுவனத்துக்கு ஜூலை 16ம் தேதி அட்வாட்ஸ் பேமெண்டாக 2521.56 கோடி வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிஷீல்டின் டோஸ் ஒன்றின் விலை 215.25 ரூபாயாகும்.

Also Read:   பாராளுமன்ற கமிட்டி ஒழித்துக்கட்ட நினைக்கும் விபிஎன் சேவை என்றால் என்ன? அதனால் என்ன ஆபத்து?

இதே போல 28.5 கோடி டோஸ் கோவேக்ஸின் தடுப்பூசி கொள்முதலுக்காக ஹைதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அட்வான்ஸ் பேமெண்ட்டாக 897 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கோவேக்ஸின் டோஸ் ஒன்றில் விலை 228.75 ரூபாயாகும்,

செப்டம்பர் 2ம் தேதி கணக்கீட்டின்படி 64.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்களுக்கு, இலவசமாக மத்திய அரசு அனுப்பி வைத்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read:  வனத்துறை அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

இது தவிர கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரியில் பிஎம் கேர் ஃபண்ட்ஸ் நிதியில் இருந்து 6.6 கோடி டோஸ் கோவிஷில்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசி வாங்குவதற்காக 1398.82 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 
Published by:Arun
First published: