ஹோம் /நியூஸ் /இந்தியா /

பெண் ஐடி ஊழியரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கும்பல்..10 பேர் மீது வழக்கு பதிவு-ஜார்கண்டில் அதிர்ச்சி!

பெண் ஐடி ஊழியரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கும்பல்..10 பேர் மீது வழக்கு பதிவு-ஜார்கண்டில் அதிர்ச்சி!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பெண் அளித்த வாக்குமூலத்தின் மூலம் குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் பெரும்பாலானோர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Jharkhand, India

  ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் 26 வயது பெண்ணை 10 பேர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த அதிர்ச்சி சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. அம்மாநிலத்தின் சாய்பாசா பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண் ஐடி நிறுவனத்தில் மென்பொருள் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்ணான இவர், வீட்டில் இருந்து பணிபுரியும் முறையில் சொந்த ஊரில் தங்கியே வேலை பார்த்துள்ளார்.

  கடந்த 20ஆம் தேதி அன்று மாலை இந்த பெண் தெக்ரஹாத்து என்ற பகுதியில் தனது ஆண் நண்பருடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, 10 இளைஞர்கள் கொண்ட கும்பல் அவர்களை இடைமறித்துள்ளனர். உடன் வந்த ஆண் நண்பரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர் இளம் பெண்ணை கடத்திச் சென்ற கும்பல் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.பாதிப்புக்கு ஆளான பெண்ணை சம்பவ இடத்திலேயே விட்டுவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றுள்ளது.

  அந்த பெண் மீட்கப்பட்டு, தற்போது சதார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெண்ணின் உறவினர்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால் மருத்துவமனை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க: ஆமைக்கறி வறுவலை சரியாக சமைக்காத மனைவியை அடித்தே கொன்ற கணவர்... அதிர்ச்சி சம்பவம்!

  காவல்துறை இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. பெண் அளித்த வாக்குமூலத்தின் மூலம் குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் பெரும்பாலானோர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் விரைவில் பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என அப்பகுதி காவல் கண்காணிப்பாளர் அஷுதோஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Crime News, Gang rape, Jharkhand, Rape case