பழைய ஓவியம், கலை எல்லாமே இன்றைய கால ஓட்டத்தில் அழிந்து வருகிறது. இதை பாதுகாக்க ஆங்காங்கே யாரோ ஒருவர் முயற்சி செய்து கொண்டே இருக்கின்றனர். அப்படி ஒருவர் காஸ்மீர் ஓவியங்களை தன் முயற்சியால் பாதுகாத்து வருகிறார்.
ஸ்ரீநகரின் லால் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான ஷஃபியா ஷாஃபி. இவருக்கு காஸ்மீரி பேப்பர் மாச்சே கலை மீது மிகுந்த ஆர்வம். பேப்பர் மாச்சே என்பது காஷ்மீர் பள்ளத்தாக்கின் கைவினை மற்றும் நுண்கலைகளின் கலவை கலையாகும்.
பழைய காகிதம் அல்லது காகித கிழிசல்கள் வைத்து அதன் மூலம் பொருட்களை ஓவியம் வரைவார்கள். அது தான் பேப்பர் மாச்சே கலை . அலங்கார பொருட்கள், வளையல், பெட்டிகள் என்று பல பொருட்களை செய்வர். காஷ்மீர் பகுதி மட்டுமின்றி உலக அளவில் இந்த கலைக்கு பெரும் வரவேற்பு உள்ளது.
ஆளையே விழுங்கும் முதலையால் ஏன் மென்று சாப்பிட முடியவில்லை தெரியுமா?
ஆனால் இப்பொழுது அதன் மீதுள்ள மோகமும் விற்பனையும் குறைந்து வருகிறது. நல்ல ஊதியம் கிடைக்காததால், கைவினை கலைஞர்கள் கலையை வளர்ப்பதை நிறுத்திவிட்டதால், கலை அழியும் நிலையில் உள்ளது. அப்படி அழியாமல் அதை மீட்டெடுக்கும் முயற்சி தான் ஷஃபியா முன்னெடுத்துள்ளார்.
புதிய தலைமுறையினரை காஷ்மீரி கலை வடிவத்திற்கு ஈர்க்கும் வகையில் இன்றைய நாகரிக வீடுகளில் பயன்படுத்தும் அலங்காரப் பொருட்களை மாச்சே முறையில் செய்து அதில் ஓவியம் தீட்டி, பழமையான கலை வடிவத்தின் மறுமலர்ச்சியைத் தொடங்கியுள்ளார்.
‘காஷ்மீர் மட்பாண்டங்களும் கலை வடிவங்களும் அழிந்து வருகின்றன. காஷ்மீரி கலையை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்க இது எனது முயற்சி’ என்று ஷஃபியா கூறினார்.
எந்த வகுப்புகளுக்கும் செல்லாமல் பேப்பர் மாச்சேவைத் தானே கற்றுக்கொண்டார் ஷஃபியா. ‘இந்த கலையின் மூலம்,நான் என்னை இந்த உலகிற்கு காட்டுகிறேன். இதனால் ஒரு மன அமைதியையும் ஏற்படுகிறது ‘ என்கிறார் அவர்.
ஷஃபியா சமூக ஊடகங்களில் தனது ஒரு சில பேப்பர் மேச்சே கலைகளை வெளியிட்டார். அது பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது 'பேப்பர் மாச்சே' கலைக்காக தேசிய மற்றும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்று வருகிறார்.
ஷஃபியாவிற்கு இப்போது காஷ்மீர் முழுவதிலும் இருந்து ஆர்டர்கள் வருகின்றன. இவரது முயற்சியானது பேப்பர் மச்சே கலை வடிவத்திற்கு ஒரு ஊக்கத்தை அளித்துள்ளதோடு சந்தை விற்பனையில் வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்த கலையை ஊக்குவிக்க இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்து முன்னெடுப்புகள் வருகின்றன. இதனால் அழியும் நிலையில் உள்ள கலை மீண்டும் நல்ல முன்னேற்றப் பாதையில் பயணிக்கத்தொடங்கியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kashmir, Painting, Women achievers