கேரளாவில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழப்பு

news18
Updated: August 10, 2018, 10:39 AM IST
கேரளாவில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழப்பு
மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ள பகுதி
news18
Updated: August 10, 2018, 10:39 AM IST
கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நிலச்சரிவில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக திருவனந்தபுரம், கண்ணுார், கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. அந்த மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். வயநாடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3,000 பேரை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.

மேலும் அந்த மாவட்டங்களில் மின்சாரம் தடைபட்டதுடன், பள்ளி, கல்லுாரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் வகையில் தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாயும், கர்நாடகா சார்பில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்றார்.

இந்த பேரிடர் காலத்தில் கேரள மக்களோடு தோளோடு தோள் நிற்போம் என்றும் பிரதமர் மோடி கூறினார். கனமழை காரணமாக தேசிய பேரிடர் மீட்புப்படையின் 6 குழுக்களை கூடுதலாக அனுப்ப வேண்டும் என்றும், ராணுவம் மற்றும் கடற்படை உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து அரக்கோணத்தில் இருந்து கமெண்டர் ரேகா நாயர் தலைமையில் நான்கு பேரிடர் மீட்புக்குழுவினர் கேரளா விரைந்துள்ளனர். கன மழை காரணமாக ஆலப்புழாவில் வரும் சனிக்கிழமை நடைபெறவிருந்த புகழ்பெற்ற படகுப்போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.  26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணையில் இருந்து முதற்கட்டமாக நொடிக்கு 50,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இதனால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மூன்று முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வரும் பாதையில், செல்பி எடுக்கவோ, மீன் பிடிக்கவோ முயற்சிக்க வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
First published: August 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...