ஒரே நாளில் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு... ஆக்ஜிசன் பற்றாக்குறையால் தொடரும் அவலம்

மாதிரிப்படம்.

கோவா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக ஒரே நாளில் 26 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

 • Share this:
  கோவா மாநிலம், பாம்போலிம் பகுதியில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், நேற்று அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை 26 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு நாள் அதிகாலையும், ஆக்ஸிஜன் விநியோக பிரச்னை காரணமாக பலர் உயிரிழப்பதாக கூறியுள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர், இதுதொடர்பாக மும்பை உயர் நீதிமன்றம் நேரடியாக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

  இதனிடையே, முதலமைச்சர் பிரமோத் சவந்த், மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அதன்பின்னர் பேசிய முதலமைச்சர் பிரமோத், மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லையென்றும், ஆக்ஸிஜனை நோயாளிகளுக்கு விநியோகிப்பதில் தவறு நிகழ்ந்திருப்பதாகவும் கூறினார்.

  மருத்துவக்கல்லூரியில் உள்ள 150 கொரோனா நோயாளிகளை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றுமாறும் அவர் அறிவுறுத்தினார்.  கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு குறித்து விசாரிக்க 3 பேர் அடங்கிய குழு நியமிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

  இந்நிலையில் கோவாவில் உள்ள அரசு மருத்துவமனையில், மருத்துவ ஆக்சிஜன் கசிந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது. மர்மகோவாவில் அமைந்துள்ள தெற்கு கோவா மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் சேமிப்புக் கலனில் வேறு வாகனத்தில் இருந்து மருத்துவ ஆக்சிஜனை நிரப்பும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பார்தாக விதமாக கசிவு ஏற்பட்டதால் அந்த இடமே வெண்புகை மண்டலமாக மாறியது. ஆனால் உடனடியாக கசிவு சரி செய்யப்பட்டதாகவும் யாருக்கும் பாதிப்பில்லை என்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
  Published by:Vijay R
  First published: