Home /News /national /

'லஞ்சம், பரிந்துரை இல்லாமல் 25 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்' : பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

'லஞ்சம், பரிந்துரை இல்லாமல் 25 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்' : பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

பஞ்சாப் தேர்தல் பிரசாரத்தின்போது வேலையில்லா பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி முன்பு வாக்குறுதி அளித்திருந்தது.

    லஞ்சம், பரிந்துரை துளியும் இல்லாமல் 25 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பக்வாந்த் மன் அறிவித்துள்ளார்.

    பஞ்சாபில் பக்வாந்த் மன் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு புதிதாக பொறுப்பேற்றுள்ளது. புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நேற்று முதல்வர் பக்வாந்த் மன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தின்போது, காவல்துறையில் 10 ஆயிரம் பணியிடங்கள் உள்பட மொத்தம் 25 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கு முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக முதல்வர் பக்வாந்த் மன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது-

    பஞ்சாப் காவல்துறையில் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். இவை தவிர்த்து அரசின் பல்வேறு துறைகளில் 15 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். இவை அனைத்தும் தகுதி, திறமையின் அடிப்படையில் மட்டுமே நிறைவேற்றப்படும். லஞ்சம், சிபாரிசு என்ற பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க - பஞ்சாபை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலை குறிவைக்கும் ஆம் ஆத்மி...

    வேலையில்லா பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி முன்பு வாக்குறுதி அளித்திருந்தது. அதன் அடிப்படையில் முதல் அறிவிப்பாக 25 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை ஆம் ஆத்மி கட்சி பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற அக்கட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    இதையும் படிங்க - Cyclone Asani: வங்க கடலில் நாளை உருவாகிறது அசானி புயல்... கனமழைக்கு வாய்ப்பு

    டெல்லி கட்சி என்று எதிர்க்கட்சிகளால் ஆம் ஆத்மி விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பாரம்பரிய கட்சிகளை பின்னுக்கு தள்ளி விட்டு, பிரமாண்ட வெற்றியை ஆம் ஆத்மி பதிவு செய்தது. மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் அக்கட்சி 90 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
    Published by:Musthak
    First published:

    Tags: Punjab

    அடுத்த செய்தி