முகப்பு /செய்தி /இந்தியா / கார், ரூ.2.5 லட்சம் பணம் கேட்டு வரதட்சணை கொடுமை.. இளம்பெண் வாயில் ஆசிட் ஊற்றிய கணவர் வீட்டார்.. உ.பி.யில் கொடூரம்..!

கார், ரூ.2.5 லட்சம் பணம் கேட்டு வரதட்சணை கொடுமை.. இளம்பெண் வாயில் ஆசிட் ஊற்றிய கணவர் வீட்டார்.. உ.பி.யில் கொடூரம்..!

கோப்புப் படம்

கோப்புப் படம்

திருமணமாகி 6 ஆண்டுகள் கடந்த நிலையிலும் வரதட்சணையாக வேண்டும் என கேட்டு தொடர்ச்சியாக கொடுமைபடுத்தியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Uttar Pradesh, India

உத்தரப் பிரதேச மாநிலம்  பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான அஞ்சும் என்ற பெண்ணுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்னர் இலியாஸ் என்பவருடன் திருமணமாகியுள்ளது. அஞ்சுமை அவரது கணவர் வீட்டார் தொடர்ச்சியாக வரதட்சணை கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். திருமணமாகி 6 ஆண்டுகள் கடந்த நிலையிலும், தனக்கு ஒரு கார் வேண்டும், ரூ.2.50 லட்சம் பணம் வரதட்சணையாக  வேண்டும் எனக் கேட்டு தொடர்ச்சியாக கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் 15 நாட்களுக்கு முன்னர் அஞ்சும் தனது தாய் வீட்டிற்கு வந்து கணவர் வீட்டில் வரதட்சணை கொடுமை செய்வதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி அன்று அஞ்சும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அவரின் வீட்டாருக்கு தெரியவந்ததது. அதிர்ச்சியடைந்த அவரின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். தொடர்ந்து பெண்ணிடம் என்ன நேர்ந்தது என்ற விசாரித்த போது தான் அதிர்ச்சி உண்மை அம்பலமானது. வரதட்சணை தராததை காரணம் காட்டி கணவர் வீட்டார், அந்த பெண் அஞ்சும்மை வற்புறுத்தி ஆசிட் குடிக்க வைத்துள்ளனர்.

இதனால், பாதிக்கப்பட்ட அஞ்சும் உடல்நிலை கவலைக்கிடமாகி மருத்துமனையில் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். மரணத்திற்கு முன்பாக மாஜிஸ்ட்ரேட் முன்பு கணவர் வீட்டார் வற்புறுத்தி ஆசிட் குடிக்க வைத்ததையும், அவர்கள் வரதட்சணை கேட்டதையும் வாக்குமூலமாக தந்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் குறித்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Dowry, Uttar pradesh