ஹோம் /நியூஸ் /இந்தியா /

தலித் பெண்ணிற்கு மயக்கமருந்து கொடுத்து பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமை : பூசாரி உள்ளிட்டோர் தலைமறைவு

தலித் பெண்ணிற்கு மயக்கமருந்து கொடுத்து பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமை : பூசாரி உள்ளிட்டோர் தலைமறைவு

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

அந்த பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நிலையில் தன்னை எத்தனை பேர் வன்கொடுமை செய்தனர் என்பது தெரியாத நிலையில் அவர் இருந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rajasthan, India

    25 வயது தலித் பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து பல நாட்கள் பூசாரி உள்ளிட்ட சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ராஜஸ்தான் அஜ்மெர் மாவட்டத்தில் உள்ள 25 வயது பெண்ணிற்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அவரது குடும்ப நிகழ்ச்சிகளில் பூஜை செய்யும் பூசாரி சஞ்சய் ஷர்மா என்பவர், யாருமில்லா நேரம் பார்த்து அவர் வீட்டிற்கு சென்று அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ பதிவு எடுத்துள்ளார்.

    பின்னர் அந்த வீடியோவை காட்டி மிரட்டி பெண்ணிடம் பணம் பெற்றுள்ளார். மேலும் சஞ்சய் ஷர்மா தனது நண்பர்களுடன் வந்து மீண்டும் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நிலையில் தன்னை எத்தனை பேர் வன்கொடுமை செய்தனர் என்பது தெரியாத நிலையில் அவர் இருந்துள்ளார்.

    இதேபோல் கடந்த மாதம் பல முறை அந்த பெண்ணை சஞ்சய் ஷர்மா உள்ளிட்ட சிலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்நிலையில் உச்சக்கட்டமாக அந்த பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வெளியில் சொன்னாலோ புகார் அளித்தாலோ அந்த பெண்ணின் குழந்தை மற்றும் கணவர் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

    அந்த பெண் வீடு திரும்பாத நிலையில், அவர் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காணாமல் போனதாக வழக்கு பதியப்பட்டு காவல்துறையினர் தேடி வந்தனர்.

    இதையும் வாசிக்க: போதையில் பைக்கில் வந்த காதலர்கள்.. சாலையில் சென்றவர்கள் மீது மோதியதில் 8 மாத குழந்தையுடன் உயிரிழந்த தாய்..! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

    வழக்குப்பதியப்பட்டதை அறிந்த சஞ்சய் ஷர்மா கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி அப்பெண்ணை காவல்நிலைய வாசலில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். இதன் அடிப்படையில், அக்டோபர் 7ம் தேதி வழக்கு பதியப்பட்டு  காவல்துறையினர் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Crime News, Dalit, Gang rape, Rajastan