கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள காரஹள்ளியை பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி (வயது 25). பட்டியலினத்தவரான இவரது பெற்றோர் நாராயணசாமி மற்றும் வெங்கடலட்சுமி விவசாயக் கூலிகளாக வேலை செய்து குடும்பத்திற்கு வருவாய் ஈட்டிவந்தனர்.
காரஹள்ளி அரசு பள்ளியில் உயர் கல்வியை முடித்த காயத்ரி, பின்னர் பங்காருபேட்டை அரசு கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து கோலார் தங்கவயல் கெங்கல் ஹனுமந்தையா கல்லூரியில் சட்டம் படித்தார். சட்டக்கல்லூரியில் சிறந்த மாணவியாக திகழ்ந்து அதிக மதிப்பெண் பெற்ற காயத்ரி, மாநில சட்டப் பல்கலைகழகத்தில் 4வது இடம் பிடித்து சாதனை புரிந்தார்.
தொடர்ந்து பங்காருபேட்டை நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர் சிவராம் சுப்ரமணியிடம் ஜூனியர் வழக்கறிஞராக பணியாற்றியத் தொடங்கினார் காயத்ரி.இந்த சூழலில் தான் கர்நாடக மாநிலத்தில் சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற காயத்ரி தேர்வில் வெற்றி பெற்று, தனது 25 வயதில் சிவில் நீதிபதியாக பணியாற்ற தேர்வாகியுள்ளார். இதன் மூலம் 25 வயதில் நீதிபதியாக பணியாற்றும் பட்டியலினப் பெண் என்ற பெருமையை காயத்ரி பெற்றுள்ளார். வறுமையான சூழலிலும் விட முயற்சியுடன் படித்து நீதிபதியாக உயர்ந்துள்ள காயத்ரிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வாசிப்பு மற்றும் கணித திறனில் பின்தங்கும் மாணவர்கள்- வருடாந்திர அறிக்கையில் தகவல்!
தனது வெற்றி குறித்து காயத்ரி கூறுகையில், கூலி வேலை செய்து என்னை படிக்க வைத்த தாய் தந்தையை மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்வதே எனது முதல் கடமை. என்னைப் போலவே பின்தங்கிய சூழலில் தவிக்கும் மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க பாடுபட வேண்டும் எனவும் விரும்புகிறேன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.