தடுப்பூசிகளை ஏன் ஏற்றுமதி செய்தீர்கள்? என கேள்வி எழுப்பியவர்கள் கைது! - ப.சிதம்பரம் கண்டனம்

ப.சிதம்பரம்

ஆடுவோமே, பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாடுவோமே என்று அவர் பதிவிட்டுள்ளார்.

 • Share this:
  தடுப்பூசிகளை ஏன் ஏற்றுமதி செய்தீர்கள்? என்று கேள்வி எழுப்பி போஸ்டர் ஓட்டியது தொடர்பாக 24 பேரை போலீசார் கைது செய்துள்ளதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  தடுப்பூசி விவகாரத்தில் பிரதமர் மோடியை கேள்வி எழுப்பும் விதமாக டெல்லியில் பல இடங்களில் போஸ்டர்கள் ஓட்டப்பட்டிருந்தன. அதில் எங்கள் குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்தீர்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. இது தொடர்பாக பல்வேறு வழக்குகளை பதிவு செய்த போலீசார், போஸ்டர் ஒட்டியது தொடர்பாக 24 பேரை கைது செய்தனர்.

  இந்த கைது விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கைது நடவடிக்கைக்கு எதிராக பலரும் போஸ்டரில் உள்ள அதே கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, குரல் கொடுத்து வருகின்றனர்.

  இந்நிலையில், இந்தியா சுதந்திர நாடு தான், கேள்வி கேட்டால் கைது செய்யப்படுவார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

  இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, ஐயா மோடி அவர்களே,
  எங்கள் குழந்தைகளுக்குத் தேவையான தடுப்பூசிகளை ஏன் ஏற்றுமதி செய்தீர்கள்? இந்தக் கேள்வியைக் கேட்டு போஸ்டர் ஒட்டியதாக குற்றம் சாட்டி 24 பேரை டில்லி போலீஸ் கைது செய்தார்கள். ஆடுவோமே, பள்ளு பாடுவோமே,
  ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாடுவோமே என்று அவர் பதிவிட்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: