Home /News /national /

பெங்களூருவில் 5 நாட்களில் 24க்கும் அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா: ஊரடங்கு யோசனையில் கர்நாடகா!

பெங்களூருவில் 5 நாட்களில் 24க்கும் அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா: ஊரடங்கு யோசனையில் கர்நாடகா!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பெரியவர்களுடன் ஒப்பிடும்போது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே உள்ளது. எனவே, குழந்தைகளை பத்திரமாக வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பெங்களூரு நகரில் கடந்த 5 நாட்களில் 242க்கும்  அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்த காணப்பட்டது. தற்போது, தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே, கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள அனைத்து மாநிலங்களும் தயாராகி வருகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொரோனா 3வது அலை குழந்தைகளையும் தாக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளதால் அதற்கேற்ப  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில்  மாநில அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன. குழந்தைகளுக்கான சிறப்பு கொரோனா வார்டுகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் கடந்த 5 நாட்களில் 19 வயதுக்கு உட்பட 242 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அரசின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.  இதேபோல், கொரோனா மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக வல்லுநர்களும் எச்சரிக்கின்றனர்.

    இதையும் படிங்க: தன்னை கடத்திவிட்டதாக நாடகமாடி நண்பரை காண சென்ற பள்ளிச் சிறுமி: வளைத்து பிடித்த போலீசார்!


    கடந்த 5 நாட்களில்  தொற்று உறுதியானவர்களில் 106 குழந்தைகள் 9 வயதுக்கும் குறைவானவர்கள்,  136 குழந்தைகள் 9 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுவது வருங்காலங்களில் அதிகரிக்கக் கூடும்  சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

    இது தொடர்பாக சுகாதாரத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், அடுத்த சில நாட்களின் இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கக்கூடும் பெரும் ஆபத்து உள்ளது.  குழந்தைகளை இந்த வைரசிடம் இருந்து பாதுகாக்க நாம் அவர்களை வீட்டுக்குள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். பெரியவர்களுடன் ஒப்பிடும்போது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே உள்ளது. எனவே, குழந்தைகளை பத்திரமாக வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என பரிந்துரைக்கப்படுவதாக தெரிவித்தார்.

    மேலும் படிக்க: ‘சூப்பர் பவர்’ டெல்டா : சாதாரண கொரோனாவை விட 1,260 மடங்கு வீரியமிக்கது- அடுத்து B.1.621?


    ஏற்கனவே,  கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் அம்மாநில அரசு வார இறுதி மற்றும் இரவு நேர ஊரடங்களை அமல்படுத்தியுள்ளது. கேரளா- கர்நாடகா, மகாராஷ்டிர- கர்நாடக எல்லையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 16ம் தேதி முதல் பாதிநேர ஊரடங்கை விதிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Bengaluru, Children, Karnataka

    அடுத்த செய்தி