சைக்கிளுக்கு ஏர் அடைத்ததில் 2 ரூபாய்க்காக நடந்த சண்டை... ஒருவர் அடித்துக்கொலை...!

சைக்கிளுக்கு ஏர் அடைத்ததில் 2 ரூபாய்க்காக நடந்த சண்டை... ஒருவர் அடித்துக்கொலை...!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: November 10, 2019, 4:38 PM IST
  • Share this:
சைக்கிளுக்கு ஏர் அடைத்ததற்கு 2 ரூபாய் கொடுக்காமல் சென்றவருக்கும் கடைக்காரருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடா பகுதியில் உள்ள வலசபகலா என்ற கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சுவர்னராஜு என்ற 24 வயது கட்டட தொழிலாளி, அங்குள்ள சைக்கிள் கடையில் தனது சைக்கிளுக்கு ஏர் அடைக்கச் சென்றுள்ளார்.

ஏர் அடைத்ததும் அதற்காக ரூ.2 தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், கடை உரிமையாளர் சம்பாவுக்கு, சுவர்னராஜுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் கைக்கலப்பாக மாறிய நிலையில், சுவர்னராஜு, சம்பாவை தாக்கி திட்டியுள்ளார்.


அப்போது, சம்பாவின் நண்பராக அப்பா ராவ், உடனே அங்கிருந்த இரும்பு கம்பியால் சுவர்னராஜு தலையில் ஆவேசமாக தாக்கியுள்ளார். இதனை அடுத்து, ரத்த வெள்ளத்தில் சுவர்னராஜு அங்கேயே சரிந்து விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சுவர்னராஜு உயிரிழந்தார். போலீசார், சம்பா மற்றும் அப்பா ராவ் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், அப்பா ராவ் தலைமறைவாகியுள்ளார்.
First published: November 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்